மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
குழாங்கள்8 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
குழாங்கள்
134✓
மொப்பில்லை யென்னவுல குய்யமறு கெய்தினனால்
செப்புகலை விஞ்சையரின் தேவியரு - மைப்படியு
135✓
நாட்டத்துக் கந்தருவ நல்லாருங் கின்னரரி
னாட்டியரு நாக ரரிவையருங் - கோட்டசுரர்
136✓
கன்னியருங் கிம்புருடர் கன்னியருஞ் சாரணரின்
கன்னியரும் பூதலத்துக் கன்னியரு - மன்னுமயில்
137✓
தாரகற்செற் றோனைத் தாங்கத் தவஞ்செய்த
சீரகத்தைக் கண்டுதெரி சிப்பமென - வோரகத்தே
138✓
யெண்ணி யடைமயில்க ளென்ன முருகனெழில்
வண்மை யறிய வருமடவார் - நண்ணுமனை
139✓
முன்றிலில்மா டத்தில் முகப்பில்சிட் டையிற்செய்
குன்றினிற் சாலத்திற் கோபுரத்தில் - மன்றில்
140✓
பலாப்பழத்தி லீமொய்க்கும் பான்மையே போல
உலாப்போது மன்ன லுளத்தி - லுலாப்போதுந்
141✓
தெய்வத் திருவருளாஞ் செந்தேனை வான்கயலா
மைவைத் தகன்றவிழி வண்டுகளா - லுய்யவுண்பார்
142✓
வானோ ரிறைவன் மகளை வழுத்துவா
ரேனையோர் பெண்ணை யிறைஞ்சுவார் - வானநீர்க்
143✓
கங்கை மதலைதோள் கண்டு தமதுவரைக்
கொங்கையிணை நோக்கிக் குழைவரகம் - பங்குயரும்
144✓
வள்ளிதெய்வ நாயகியை மாமயிலை யன்பரெலா
முள்ளுமீ ராறுகணை யொள்வேலை - வெள்ளைநீ
145✓
றேய்ந்த திருநுதலை யின்முகத்தைப் புன்முறுவல்
வாய்ந்த மலர்வாயை வாகுவினை - யாய்ந்தமராத்
146✓
தாமத்தை யாயுதங்க டங்கு மலர்க்கரத்தை
நாமத் திருவடியை நண்ணெழிலைக் - கோமகனைக்
147✓
கண்ணார நோக்கிக் கசிந்து வியந்துவப்பார்
அண்ணாந்து நோக்கி யழகென்பார் - மண்ணாளுஞ்
148✓
சேயோ னுவக்குந் திருத்தே ருலாக்காண
மேயோமே யெங்கடவ மேலென்பார் - நேயமிகு
149✓
காரூர்தி யென்னவே கண்களோ ராயிரம்பெற்
றாரவரே மேலா மமரரென்பார் - வீரமயி
150✓
லேறுவாற் பார்த்துயிர்த் தெம்மையணை வீரென்று
கூறுவார் மால்கொண்டு குன்றுவார் - சேறுமிகு
151✓
மாலை யணியென்பார் மாலை யழியென்பார்
வாலைப் பெருமானே வாவென்பார் - சீலக்
152✓
கொடிக ளிருவர் குலவு பெருமாள்
படியருள்வ ரென்று பணிவா - ரடிகளுக்
153✓
கெங்கணீர் மஞ்சனமோ வெந்தொடிகள் பூசனைக்குத்
தங்கு திருப்பள்ளித் தாமமோ - விங்குறையுங்
154✓
காம னெமைவருத்தல் காணுமிறை வாவென்பார்
யாமமுற்று மெம்மிடர்நீக் காயென்பார் - சேமத்
155✓
துகிலிழப்பார் மாரன் றொடுகணையாற் றுன்ப
மசுமுறவே யொன்று மறியார் - மிகவெயர்வை
156✓
சிந்துவார் கொங்கை திரண்டுவிம்ம வஞ்சியிடை
பந்ததனைத் தாங்காது பாரத்தால் - மந்திரமுண்
157✓
புல்லோனைப் போலப் புரள வருந்துவார்
நல்லோனே யெம்முடைய நாணையழித் - தில்லிருவா
158✓
வும்முடைய நாணை யுவந்தாகத் தேயணிந்தீர்
வெம்மலையிற் செண்டை விரட்டினீர் - ரெம்முலையிற்
159✓
செண்டை விரட்டுவீர் செவ்வாய் திறந்தொருகா
லண்டைவரு வேனென் றறைந்திட - ரெண்டிசைக்கு
160✓
மிக்கான செம்மலே வேலாயென் பாருருவில்
மிக்கா ரிவருள் விளங்கொருத்தி - தக்க