மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
தெரிவை14 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
தெரிவை
299✓
மங்கை யொருத்தி வளருந் தெரிவையாள்
பங்கயம் பங்கம் படைத்ததென - விங்கணைந்த
300✓
செந்திருவே யன்னாள் திகழ்நான் முகன்சிகுவை
நந்திவளர் வாணியெனு நாரியா - ளந்திவண
301✓
னுண்ட விடமனைய வோதியா ணீண்முடியிற்
கொண்டபிறை யன்ன குளத்தினாள் - புண்டரிகம்
302✓
போன்ற விணைவிழியாள் பொன்குமுத வாயினா
ளான்ற வருக்கை யணிமொழியாள் - சான்றகமு
303✓
காகுகங்கண் டத்தினா ளம்பொற் கலசமெனு
மோக மளிக்கு முலையினா - ளாகத்தி
304✓
லூருமெறும்பொழுங்கை யொக்குமுரோமக்கொடியாள்
சாருந் துடியனைய தண்ணிடையாள் - தேரிலுறு
305✓
தட்டனைய வல்குலாள் தந்திக்கை போற்குறங்காள்
மட்டவிழுங் கஞ்சமெனு மாவடியா - ளிட்டமுடைப்
306✓
பெம்மான் மயூரகிரிப் பேரானன் றோளிணைகள்
கொம்மைமுலை சேர்கவெனுங் கொள்கையளா - யம்மைமிகு
307✓
வன்னியமா யூரகிரி மன்னன்பால் தூதனுப்பிக்
கன்னலின வேளின் கணைபாய - மன்னந்திப்
308✓
போதுவர வுள்ளம் புழுங்கி நெடிதுயிர்த்து
மாதவனை யெண்ணி மனம்பதைத்துக் - காதலுறுஞ்
309✓
சேடியரை நோக்கிச் சிறியேண் படுந்துயரங்
கூடெவர்க ளாற்றிக் குறைதவிர்ப்பார் - மாடுவளர்
310✓
வேனிலா னையார் விரட்டுவா ரென்றுரைத்தாள்
பானிலா வன்னமுகப் பண்பினருள் - மானனைய
311✓
சேடி யொருத்தி திகழுமிசை யாழ்வாங்கி
நாடரிய வேலிறைவ னானிலத்திற் - றோடகங்கள்
312✓
மன்னு முயர்வாவி வான்காழி நன்னகரிற்
பன்னுசிவ பாதமனப் பண்புடையார் - ரின்னலுறுஞ்
313✓
தேசஞ் செழிக்கச் சிவனருளை வேண்டவவ
ராசில் மனங்களிக்க வன்னவற்குத் - தேசுமிகு
314✓
சம்பந்த னாயுதித்த தன்மையுந் தோணிபுரத்
தம்பனைய கண்ணா ளருண்முலைப்பா - லும்பரெலாம்
315✓
போற்ற வருந்தியதும் பொற்றாளம் பெற்றதுவு
மேற்றமுத் துச்சிவிகை யேறியதும் - சாற்று
316✓
முயலகனோய் நீக்கியது முத்துவிதா னம்பெற்
றியலிசையாற் பொற்பதிக மேத்தி - வயல்சூழும்
317✓
வீழி மிழலை விமலன்பாற் பொற்காசு
தோழமையாற் பெற்றுச் சுருதிவனம் - வாழ்கதவம்
318✓
பூட்டியதுந் தென்னனுடல் பொங்குசுர நீக்கியது
மேட்டை நெருப்பிட் டெடுத்ததுவுந் - தீட்டுதமிழ்
319✓
ஆற்றிலெதி ரேறவிடு மப்பெருமை யுங்கொடிய
கூற்ற வமணரைக் கூர்க்கழுவி - லேற்றியது
320✓
மோடம் பதிகத்தா லோட்டியதும் புத்தநந்தி
மூடன் றலையிலிடி முட்டியது - மேடகத்துச்
321✓
செங்கணிக ளேற்றியதுஞ் சீர்ச்சிவநே சர்மகளி
னங்கம்பெண் ணாகவருளியதுஞ் - துங்கவொளி
322✓
தன்னிற் கலந்ததுவுஞ் சாரிசையிற் சாற்றினாள்
மன்னு மிரவகன்று வானொளியான் - துன்னினான்
323✓
பல்லியங்க ளார்ப்பப் பழுதில் குமரன்றா
னொல்லையினி லுற்றனனென் றோங்குகிளி - சொல்லவே
324✓
வேள்யாரனை யன்ன விரைகுழலா ளன்னவனின்
வாள்கணை யன்ன மதிமுகத்தாள் - வேள்கரும்பை
325✓
யொத்தபுரு வத்தினா ளோங்குமுர சக்கண்ணாள்
கத்துமவன் காகளம்போற் காண்மொழியாள் - வித்தைமிகு
326✓
மாமகுடம் போலும் வனமுலையாள் மால்மகனுக்
கேமமுறு காலம்போ லேகினா - ணாமவேல்
327✓
வேந்தன் றிருவடியில் வீழ்ந்து வணங்கினாள்
சேந்தா வெனதாவல் தீரென்றா - ளேந்துமிழை
328✓
சொல்லு மிதுகேட்டுத் தோழி யொருத்தியவண்
சொல்லுவாள் மஞ்ஞைமலைச் சோதியே - வல்லாய்நின்
329✓
மாமலையோ வெந்தலைவி மாமுலையோ நன்றென்று
வாம முறக்காண வந்திடாய் - நாமவே
330✓
னற்படையோ வெந்தலைவி நல்விழியோ நன்றென்று
சொற்படையா யிங்கணைந்து சொல்லுவாய் - வெற்பனே
331✓
வள்ளிமான் தாய் விழியோ மானிவளின் வான்விழியோ
வுள்ளவிவை யின்னன் றுரைத்திடாய் - தெள்ளுதமிழ்
332✓
நாதா வெனவுரைத்தா னாதன் றிருத்தேரி
லோதா தகன்றனன்பி னோர்வனிதை - பூதலத்துக்