முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
உடன்வருந் தேவர்கள்.6 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

உடன்வருந் தேவர்கள்.

113✓
வண்ணன் களதமு மாதேவ னேறுமழை
வண்ண னுவணமு மாலுந்திப் - பண்ணவனூ
114✓
ரன்னமுமு ருத்திரர்க ளாறெவ ரேறுமொளி
பன்னிருவர் யந்திரமும் பானிலா - மன்னிவளர்
115✓
மானமு மஷ்டவசு வானிருடி யோரெழுவ
ரான விவர்வருநல் லாதனமு - மானமிகு
116✓
காரி யிருவர் களிறும் புரோகதியும்
வீரரொன்பான் றேருமுயர் விண்ணிறைவன் - வாரணமுந்
117✓
திக்கெட்டுங் காப்போர் திகழு நரர்விலங்கு
118✓
ரேழு மடவா ரிலங்கு விலங்குபுள்ளும்
யாழின் முரியருளு மண்ணலுயர் - மாழைமணி
119✓
முத்தூர்தி யும்வாய்மூர் முன்னவனின் கேடகமு
மத்தன்ப னேறும்வெள் ளானையுஞ் - சித்தப்
120✓
பெருந்துறையிற் கோயிலமை பெம்மானி னேறு
மரன்றோழன் கஞ்சிகையு மாளூர்ப் - பரனையிராத்
121✓
தூதுவிட்ட பெம்மானார் சொல்லுந்தொண் டத்தொகையு
ளோதிவைத்த நாயன்மா ரூர்தியுங் - கோதறுநற்
122✓
சீர்ப்புகழைக் கந்தனடி சேர்த்தபிரான் கேடகமுங்
கூர்ப்புக் குமர குருபரனி - னார்ப்பறுகுங்
123✓
காம னவந்திகையுங் காந்தருவர் பைசாசர்
சேமவிஞ்சை யர்யோகர் சித்தசுரர் - மாமகரம்
124✓
பூதர் கருடர் புகழ்சா ரணரியக்க
ரேதமில்விண் வாச ரியலுரகர் - மாதேவ
125✓
ரேமமுறு கோக்க ளிசைதைத் தியர்நிருத
ராமிவரும் பூவிற்பா லாழியெனச் - சேமநிதி
126✓
யாகுந் திருநீ றணிந்துவரு தொண்டரும்
வாகு மிகுபுயத்து மாறனும்வண் - ணீகைமிகு
127✓
சோழனுஞ் சேரனுஞ் சொல்லுமறை யோர்களுங்
கோழிப் பதாகைக் குமரனுரு - தோழமையால்
128✓
தீண்டும் பெரும்பேறு செய்யுமறை வாணரு
மாண்ட லுறவரமா வண்வடிவே - லாண்டகை