முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
மங்கை11 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

மங்கை

226✓
கொங்கையாள் மாரன் குலவ விரும்புமெழில்
மங்கைப் பருவமட மங்கையாள் - தங்குமெழிற்
227✓
காளையர்க்கு மையற் கடுவாகு நோயீந்து
கூளியா னோய்தீர்க்குங் கொள்கையாள் - வாளியான்
228✓
போகநூல் கற்றுப் பொருளறிந்து பூரிப்பாள்
நாகிறைவன் றோளணைய நாடுவாள் - வேகமின்
229✓
காசினியில் வந்ததெனுங் காட்சியாள் வாசவனி
னாசிலுய ரூர்தி யளகத்தாள் - மாசிவனின்
230✓
வேணி வளரும்மதி யன்ன வியனுதலாள்
நாணி யெனும்புருவ நங்கையாள் - மாணெழில்சேர்
231✓
வள்ளி யினைப்பயந்த மான்விழிபோ லேயிறைவ
னுள்ள முவக்கு முயரயில்போற் - கள்ளவிழிச்
232✓
சாரங்கங் கொவ்வைத் தனிக்கனிச் செவ்வாயாள்
சாரங்கி யென்னமொழி சாற்றுவாள் - நீறங்கன்
233✓
தோன்று குழலனைய தோளினா டோகைமலை
போன்ற தனத்தினாள் பூவாளித் - தோன்றலுடல்
234✓
மானு மிடையினாள் வானுயரு மோடையினை
மானுமக லல்குலாள் வான்கதலி - மானுந்
235✓
தொடையினாள் நான்முகனின் சோதிவள ரன்ன
நடையினாள் பூஞ்சோலை நண்ணிப் - புடையினார்
236✓
சேடியர்கள் கூறத் திருவுச லேறிமணிச்
சூடகங்க ளார்ப்பத் துணைவிழிகா - தோடநுதல்
237✓
வேர்வை யரும்ப வியனூர புரமொலிப்பக்
கூர்விழியா ளாடிக் குதுகலித்துப் - பார்வரையான்
238✓
வண்மையுயர் பாங்கியராற் கேட்டு மகிழ்காலை
திண்மையுடை வேலான் றிருத்தேரி - லண்மையுறுந்
239✓
தொண்டர்க் கருள்புரியத் தோன்றினான் மங்கையடைந்
தண்டர்க் கரியானை யஞ்சலித்தாள் - புண்டரிகத்
240✓
தாளான் மறுகு தனைக்கடந்தான் மாமயிலாள்
வேளான் கணையால் மிகமெலிந்தாள் - தோழியர்கள்
241✓
மாதுக் கரசனைய மாமயிலைக் கொண்டேகிப்
போதுப் படுக்கை புகுத்தினார் - நாதன்
242✓
திருமாலை வேண்டுமுயர் செம்முலையா ளுற்ற
பெருமலை கண்டு பிதற்றி - நறுமாலை
243✓
வாசம் புரியுமிட மென்ன வளர்பெருமா
னேசம் புரியுமுயர் நித்தனே - யாசையினை
244✓
நீக்குவா யென்னு நிருமலா யென்னுமிடர்
போக்குவா யென்னும் புகழ்முலைகள் - நோக்கி
245✓
நெடிதுயிர்க்குந் தத்தையினை நீபோய் மயலைக்
கடிதுரைப்பா யென்னக் கழறு - முடிசோரு
246✓
மிப்படி யாகு மிவடன்னைத் தாயரடைந்
தொப்பிலான் மாலை யுனைமருவச் - செப்புவே
247✓
மாலை யளித்துன்னை மருவுவா ராகலினீ
மாலை யொழிக்கவென வாணுதலுஞ் - சாலவே