முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
திருப்பள்ளியெழுச்சி3 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

திருப்பள்ளியெழுச்சி

78✓
பெறுதெய்வ யானையினைப் பேருலக மேத்த
வருவள்ளி மானை மருவி - யருண
79✓
னெழுமுன்னே யன்ப ரிசைமறையி னார்ப்பும்
பழுதிலா வீணையொலிப் பண்பும் - விழவறியச்
80✓
சாற்று முரசொலியுஞ் சங்கவொலி யும்மடியர்
போற்றமுரு காவொலியும் பொங்கியெழக் - கூற்றினைமுன்
81✓
காதினான் மைந்தன் கடுகத் துயிலினைநீத்
தேதினான் மெய்ப்பொருளை யேத்தன்பர் - தீதறவே