முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
திருமஞ்சனமாடல்4 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

திருமஞ்சனமாடல்

82✓
பெற்றுப் பெருமையுறப் பேருலாக் கொள்ளநினைந்
துற்றவா னைந்து முயல்பாலு - முற்று
83✓
ததியும் பிரசமுஞ் சந்தனமு நீறும்
விதிநூற் கனித்தொகையு மேலாங் - கதியுதவுந்
84✓
தண்பனிநீ ரும்மிறைவன் சார்சரவ ணப்பொய்கை
வன்பனி நீரு மகிழ்ந்தாடிப் - பண்புமிகு
85✓
மாதிசைவர் நீடுமுய ராகமத்தி லேயரணா
ரோதிசைவிற் செய்பூசை யுட்கொண்டு - கோதிலுயர்