முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
திருச்சின்னம்7 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

திருச்சின்னம்

129✓
வந்திப் பவரிடர்கள் மாற்றத்தே சூர்ந்துவந்தா
னந்திப் பிறையணியு மண்ணற்கு - முந்துநாள்
130✓
ஞானப் பொருள்விளக்கு நங்குகன்வந் தான்றேவ
சேனைக் கிறைவந்தான் செய்யகான் - மானுக்
131✓
கிறைவந்தான் காழி யினில்வந்தான் வந்தான்
கறைமேனிக் கைமுகத்தான் றம்பி - முறையேவந்
132✓
தான்முகை நீக்குஞ் சரவணப வன்வந்தா
னான்முகனு மாலு நயந்தறியா - வானவன்செவ்
133✓
வேள்வந்தா னென்ன வியன்றிருச்சின் னம்மார்ப்ப
வாள்விழியா ராட வருகுழுவக் - கேழ்கடலு