முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
நூல்2 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

நூல்

1✓
பொன்னுலகங் காக்கும் புரந்தரனும் வானவரு
மன்னு மரியயனும் வண்மையுற - வின்னநிறத்
2✓
திப்படிய னிவ்வணத்த னிவ்வுருவ னென்றறிந்து
செப்பும் வகையறியாச் செல்வன்கா - ணிப்புவியில்
3✓
முத்துடைத்தே யென்றவ்வை மூதாட்டி யார்புகழ்ந்த
தத்தையர சாள்கன்னித் தண்ணாட்டில் - வித்தகநூ
4✓
லோங்கிவளர் சங்கமுய ரொண்கூட லென்னகரில்
தேங்குபுக ழாரவமர்ந் தேசிவனார் - பாங்குறவே
5✓
யங்கயற்க ணம்மை யளித்தவர சாட்சியினை
யிங்கயற்க ணுள்ளார்க ளின்பமுறப் - பொங்குபெருங்
6✓
கங்கைச் சடையைக் கரந்து கதிர்மகுடந்
துங்கமுற வேயணிந்து துள்ளுகயல் - தங்குகொடி
7✓
யென்ன வுயர்த்தி யிருந்தாண்ட முன்னாளில்
மன்னு தடாதகையின் வான்வயிறு - பன்னுகரு
8✓
வுற்றதுபோ லாக வுயர்சோம வாரத்திற்
கொற்றவர்க ணின்று குதுகலிக்க - முற்றியநால்
9✓
வேத முழங்கவுயர் விண்ணவரு மண்ணவரு
மேதமற்ற தென்ன வெழுந்தவன்காண் - சோதிமணிச்
10✓
சொக்கலிங்க னாரருளுந் தூவேல் வளைசெண்டு
மிக்கதெனப் பெற்ற விமலன்காண் - தக்கவடி
11✓
வேலைக் கடல்சுவற விட்டபெரு மான்முத்து
மாலை யளித்த மகபதியின் - கோலமுடி
12✓
சிந்த வளையெறிந்த செல்வன் மகமேரு
நந்து நிதிபெறவே நற்செண்டை - யுந்தியவன்
13✓
கோழியையும் பாடியதன் குஞ்சையும்பா டேனென்ற
வாழியபொய் யாமொழியை வாழ்விக்கத் - தோழமையால்
14✓
வெங்கா னகநடுவண் வேடுவனாப் போந்தருளி
யங்கார்விற் பன்னனனி யச்சமுற - விங்காரு
15✓
முட்டையையும் பாடுகென முன்னவன்சொல் பொன்போலுஞ்
சிட்டவுயர்வாசகத்தைச் சேர்த்தவன்காண் - மட்டவிழுங்
16✓
கொன்றை மலர்த்தாமக் கோவுக் குயர்பிரம
மன்று மொழிந்த வமலன்காண் - துன்றியசீர்
17✓
வெள்ளிக் கிரியான் விளங்குமுமை யம்மையினைத்
தெள்ளியிரு கூறாக்கிச் சேரொருகூ - றுள்ளியே
18✓
வாமபா கத்தமைத்து மற்றொருகூற் றையொருசீர்ச்
சேமக் குழவியாச் செய்தருளி - யாமவற்கு
19✓
ஞானசத்தி யைமனத்து ணல்கியிச் சைகிரியை
யானசக்தி யும்படைய தாவீந்து - வானக்
20✓
கயிலை வரையிற் கருது வடபா
லயிலார்நற் கோயி லமைத்து - மயிலொன்றை
21✓
யீந்து கிருத்தியங்க ளீரிரண்ட னோடொன்று
தேர்ந்துமுறை செய்யச் செலவிடுத்தான் - போந்துமுறை
22✓
செய்யுநாட் பூவுலகிற் சீரார்காஞ் சீபுரத்தி
லையனூ ரும்மஞ்ஞை யாகவெனத் - தொய்யலுடன்
23✓
சிங்கன் பதுமன் றிறற்றா ரகனென்னு
மிங்கமுடை யார்மூவ ரேத்தவே - துங்கமுறச்
24✓
செய்சூர னற்றவத்தைச் செந்தா மரையயனும்
பையார்பாம் புப்பாயற் பண்ணவனு - மையூர்தி
25✓
யேறு மயிலுக் கியம்பிடவே யம்மயிலும்
வீறுகொண்டு சென்று விமானமொன்று - தேறியெடுத்
26✓
தந்நால் வரையு மழைத்து வருகவென
முன்னாக வேவி முகமலர்ந்து - சொன்னால்வர்
27✓
வந்தவுட னன்னவரை மாகணத்திற் சேர்த்தவரின்
பந்தமறுத் தின்பமுறப் பாலித்துச் - சிந்தைமகிழ்ந்
28✓
தேயுநா ளோர்நாளி லிந்திரனும் வானவருந்
தூயவனீ வாகனனுந் தொல்லாழி - மாயவனும்
29✓
வந்து குகனை வணங்கி யினிதிருந்தா
ரந்தநாட் சூரனடைந் தம்மயிலை - முந்துநாள்
30✓
பங்கயங்கா ணாது பரமனடி கட்குவிழிப்
பங்கயத்தை யர்ச்சித்த பண்புமிகு - சங்கையனால்
31✓
சிட்டித் தொழில்செய் திசைமுகனா லேயுற்ற
நட்டத்தா லேபகைமை நண்ணியே - முட்டத்தான்
32✓
வாகனமும் வேதனுரர் வாலனமு மும்மையலர்
சாகசத்தாற் சொற்றதெனச் சாற்றவே - வேகமாச்
33✓
சென்று கலுழனையுந் திண்ணனத்தை யும்பொருது
கொன்று விழுங்கிவரக் கூர்வேலா - னன்றுசெய்தாய்
34✓
பூவுலகஞ் சென்றங்கண் பொன்னாடா ரேமுதலா
யாவுலகும் போற்று மியல்மிகுசீர்த் - தேவுசிவன்
35✓
சிந்தை மகிழுந் திருப்புத்தூ ரின்குணபா
லந்த முறுமரசா ரண்ணியத்தில் - வந்துவரை
36✓
யாகக் கிடக்கவென வண்ண லருள்புரிய
நாக மயூரமா நண்ணுமதில் - யோகம்
37✓
புரியு மடியார் புகழ வயனு
மரியு மறியாத வண்ணல் - புரிவேணி
38✓
யீசனுதற் கண்ணி லெழுபொறிக ளோராறும்
வீசுகா லக்கினியால் விண்ணீரால் - தேசுமிகுந்
39✓
துற்ற சரவணத்தி லோராறு தீப்பொறியு
முற்றிய வாறு முதல்வனா - மற்றுமுயர்
40✓
காழி நகரிற் கவுணியற்கு ஞானப்பால்
தாழி யளித்தநற் றாயணைந்து - வாழியவென்
41✓
றோதி யுருவாறு மொன்றாகச் சேர்த்தணைக்கக்
காத லுறுமடியர் கண்களிப்பச் - சோதித்
42✓
திருமுகங்க ளாறுந் திகழ்கரமீ ராறு
மருவ வுமைமகிழ வந்தோன் - கருணையே
43✓
சீர்மேனி யானான் றிகடோ மரங்கொடிவாள்
போர்குலிச மம்பு புகழ்மிகவே - யாரங்கு
44✓
சம்மணிநற் றாமரையுந் தண்டம்வில் வன்மழுவே
லம்மவிவை யாயுதமே யாவுடையான் - மும்மை
45✓
மலநீக்கு வான்சேவல் வான்கொடியான் வள்ளி
நலமாக்குந் தெய்வவுவா நாரிப் - பலவாகு
46✓
விந்திரற்கு விச்சுவநல் லின்னுருவங் காட்டியவன்
றந்தமகா மண்டபத்துத் தானிருந்து - முந்துமவன்
47✓
செய்மஞ் சனமாடுந் தேவசே னாபதியான்
கைகளி ராறுநுங் கண்ணுதலான் - வெய்யசூர்!
48✓
மேன்மை யுறவவனை வேலா லிருபிளவாம்
பான்மை யருளித்திண் பாதியுரு - வான்மயிலும்
49✓
பாதியுருச் சேவலுமாம் பண்பருளி யம்மயிலை
யோதுமுயர் வாகனமா யூர்ந்தங்கண் - மாதுவசஞ்
50✓
சேவ லெனவுயர்த்துஞ் செல்வ னடியவருக்
காவ லுடனருள்செ யண்ணல்காண் - தேவ
51✓
ரரசு பெறுதெய்வ யானை யணைந்தோன்
பிரசச்சிந் தூரத்தார்ப் பெம்மான் - கரடமிகு
52✓
வள்ள லுதவிசெய வள்ளி யினைமணந்தோன்
கள்ளார்பூ வேங்கைக் கடிதருவாய் - மள்ளர்
53✓
மருள வுருக்கரந்தோன் வானோ ரிடுக்கண்
வெருள வருள்செய் விமல - னருளினாற்
54✓
கந்தபுரா ணம்பாடும் கச்சியப்ப தேசிகற்கு
முந்து மடியெடுத்து முன்னருளி - யந்தவுயர்
55✓
நூலையரங் கேற்றுநா ணுண்புலவர் சொல்வழுவை
வாலறிவ னாகவவை வந்தவர்கள் - சீலமுட
56✓
னொப்பும்வண் ணம்மருளு மொப்பி றனிமுதல்வன்
செப்புதிறற் றாடகையைத் திண்கரனை - யிப்புவியி
57✓
லேழு மரத்தை யியல்பகனை நீலியினை
வாழு விராதனை வாலியைச் - சூழுமுடி
58✓
பத்துடையா னைத்தடிந்த பண்பன் மருகனலார்
நத்து மெழிற்புயங்கொ ணல்லோன்வண் - சித்தமுறு
59✓
கார்மருவு சோலைசூழ் காழிக் கவுணியரின்
சீர்மருவு செல்வக் குலஞ்சிறப்ப - வேர்மருவு
60✓
சம்பந்த னாயுதித்துச் சைவசம யம்வளர
வெம்பந்த மோட வியன்றமிழ்ப்பா - சம்படியிற்
61✓
சாத்துந் தகைமையினன் தண்கூடற் கூனரச
னேத்துதிரு நீறணிய வெய்தினோன் - சீர்த்தி
62✓
யருண கிரியா னணிபுகழைப் பெற்றுக்
கருணை புரியுங் கடவுள் - வருணன்றான்
63✓
பெற்று வளர்த்த பெருமானீ ராறுகர
முற்ற பெருமா னுயர்பெருமான் - கற்றைச்
64✓
சடையா னருள்பெருமான் தைய லிருவ
ருடையா னிலைவடிவா மொள்வேற் - படையான்றாள்
65✓
வேதச் சிலம்பினான் வெற்றி மயூரமெனுஞ்
சீதச் சிலம்பினான் றேவரெலா - மோதுபல
66✓
மாகுவான் வாச வணிநீப வாகுவான்
வாகுவான் பாந்தளுறு மாமயிலான் - நாகத்
67✓
திறைவ னொருவே லிருபன்னி முப்பு
ளரையனால் வாய னனுசன் - பரையாகத்
68✓
தைந்து முகன்மதலை யாறு முகக்கடவுள்
சந்தநிறை யேழிசையுந் தானருள்வான் - வந்தெட்டுத்
69✓
திக்குந் தொழுபுத்தேள் செல்வமொன்ப தும்மீவோன்
சொக்கவங்கம் பத்துடைய தூயோன்மா - நக்கர்
70✓
பதினொருவர் போற்றவளர் பண்பனடி யார்க்குக்
கதிதருநற் பன்னிரண்டு கண்ணான் - விதிநூ
71✓
லுரைத்தமுறை யேமீன வுத்தரத்திற் சேறு
பொறித்தகொடி யேற்றிப் புலவ - னருத்தமுடன்
72✓
கொள்ளுதிரு நாளிற் குரைகழல்க ளேத்துவரேல்
விள்ளு முமது வினையென்னப் - பள்ளிதொறும்
73✓
விட்ட திருமுகமே மேவுந் திருநாளிற்
செட்டியுலாத் தெய்வத் திருநாளிற் - கிட்டவந்து
74✓
வேதிக்கு மானுடரை மேனிலையி லுய்வித்து
வேதியா மானவரை வேதிக்குந் - தீதில்
75✓
திருநாளில் லும்பர் திருமுகுடப் பத்தி
நிறைநாளி லேழுமுந் நீரு - முறையே
76✓
சிகிவரைநற் பாக்கத்துச் சேர்ந்ததா மென்ன
மிகவொலிசெய் நாளில் விளம்புந் - தகவுடைய
77✓
மாமஞ்ஞை யேமுதலாம் வாகனங்கள் மேற்பவனி
யேம முறவருநல் லின்னாளிற் - காமன்