முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
பேரிளம் பெண்15 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

பேரிளம் பெண்

333✓
காமன் றவத்தாற கடிதி னடைந்ததிரு
மாமயிற் பேரிளம்பெண் வாய்மையாள் - காமனூல்
334✓
கற்றுப் பயனறிந்த காரிகை வானமுகு
பெற்ற மகளனைய பெட்பினா - ளுற்றமதன்
335✓
கைக்கணையி னீலக் கணையன்றி மற்றவற்றாற்
புக்க செயலறியும் பொற்பினாள் - மிக்கமலர்
336✓
சூடினா னன்னுசுப்புச் சோரு மெனநினைந்து
தோடலர்கள் சூடாச் சுரியலாள் - வேடனையுங்
337✓
கூற்றினையு மேவல்கொள் கூர்விழியா ளெண்ணொன்பான்
சாற்று மிசைவெல்லுந் தண்மொழியா - ளாற்றவிடை
338✓
தாங்குமோ வென்றறியச் சாய்ந்ததோ வன்றியிடை
தாங்கா தெனவறிந்து தாலமுற - வாங்கிருந்து
339✓
நோக்குகின்ற தோதன்னை நோக்கியெதிர்ந் தோரையெலாந்
தாக்கி யலுத்த தகைமையோ - மூர்க்கர்முன்
340✓
சொல்லுமொழி கேளாது துன்பமுற்றுப் பின்புகுனி
நல்ல பொருள்விளக்க நண்ணியதோ - வல்லதிசை
341✓
யெட்டுச் சிலம்பைவெல வெண்ணிக்காஞ் சீபுரத்தை
முட்டியதோ வென்னு முலையினாள் - வெட்டவெளி
342✓
யான விடையினா ளாலவட்ட வல்குலாள்
மான வனிச்சமெனும் வானடியாள் - வேன்முதலைக்
343✓
காலைபகன் மாலை கடிதி னடைந்திறைஞ்சும்
வேலை யுடையாள் விமலனடி - சாலவே
344✓
யண்ணா மலையி லருணகிரி யாரணியும்
பண்ணார் திருப்புகழைப் பாடுவாள் - பெண்ணாவாள்
345✓
வள்ளி யெனுந்தனது வன்னியினை நோக்கியுயர்
வள்ளி மணாளன்றன் வண்புகழை வள்ளலிலார்
346✓
பெம்மான் றிருப்புகழைப் பேசெனச் சொல்லவது
வெம்மான் புகழை யிசைக்குங்கா - லம்மான்சேய்
347✓
வீதியினிற் றேரில் விளங்கினான் பேரிளம்பெண்
காத லுடனணைந்து கைகூப்பி - யோதிவருஞ்
348✓
சீர்ப்புகழைக் கூட்டத்திற் சேர்ந்து திருப்புகழாற்
சூர்ப்படைவென் றோனைத்தொழுதிறைஞ்சி - யார்ப்புடன்
349✓
செல்லுங் குழுவுடனே தேர்நிலைச்குச் சென்றிறைவன்
வல்ல முருகனடி வந்தித்துச் - சொல்லரிய
350✓
வான்பெருமை பேசி வளரிறைவன் றார்பெற்றுத்
தான்பெரிய ளாயினாள் சாருமிவ்வா - றானிறைவன்
351✓
பாரிணறவ னண்டர் பதியிறைவன் மாமஞ்ஞை
யூரிறைவன் போந்தா னுலா