மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
பெதும்பை10 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
பெதும்பை
196✓
பருவப் பெதும்பையுயர் பார்மகன்றன் பாண
மருவ நினைக்கு மடமா - னுருவத்துச்
197✓
செந்தா மரைத்திருவின் செவ்வி வளரன்னம்
பைந்தா துகாத பருவரும்பு - கந்தரங்கண்
198✓
டாடாத மஞ்ஞை யழையாத கோகிலம்
வாடாத மன்மதநூல் வாசிப்பாள் - கோடாத
199✓
வாய்சரவ ணத்திலுய ரண்ணலுருக் கூட்டுதல்போ
லேய முடித்த விருங்குழலாள் - தூயநுதல்
200✓
வெண்பிறையே யென்ன விளங்குவாள் சேல்விழிகள்
தண்கரும்பே யென்னுந் தகைமையாள் - வெண்சங்க
201✓
மென்னுமணி கண்டத்தா ளென்பிணைப்பெண் ணாகச்செய்
மன்னன்கைத் தாளம்போல் வான்கமுகிற் - றுன்னுமிளங்
202✓
காயைப்போற் புற்றிலுறு கட்செவியைப் போற்சிறிது
தூயமுகங் காட்டுந் துணைமுலையா - ளாயவொளி
203✓
வெங்கதிர்க்கு மில்லையென மேவுமிள மூராலாள்
செங்கைகள் மாந்தளிர்போற் செம்மையாள் - துங்கமணம்
204✓
வேட்டுத் தனதுகிளி மென்மணத்தை நோக்கியுள
வாட்ட மடைந்து வருந்துவா - ளீட்டமாய்
205✓
வண்டு பயிலு மலர்முகத்தாள் மாளிகையில்
தொண்டியற்ற மன்னுமுயர் தோழியரோ - டண்டர்பதி
206✓
நந்துமுயர் மாடத்து நாடம் மனைகுழங்கு
பந்து பயில்காலை பண்புடனே - சந்தநிறை
207✓
யோவியந் தீட்டு மொருவன் வரக்கரிய
காவியங் கண்ணி கழறுவா - ளோவியனே
208✓
தோகை வரைவளருந் தோன்ற றிருவுருவை
மாகயி லாயன் மகனுருவை - வாகையுறு
209✓
சேவற் கொடியானைச் சீரார் படத்துவரைந்
தாவ லுறுமெற் களியென்றாள் - மாவலனு
210✓
மிப்படிய னிவ்வடிவ னிக்குணத்த னென்றெழுதிச்
செப்பமுடி யாதான் றிருவுருவை - மெய்ப் பாலவ.
211✓
நாம விறைவனை நாகங் களுக்கிறைவா
மாமறையாற் றேடரிய மன்னவனை - யாமெழுத
212✓
வல்லோமா வாயினுமின் மாதே யுனக்கவனை
நல்லார்கள் சொல்லுவபோ னாட்டியே - யொல்லையினி
213✓
லீவே னெனவுரைத் தெம்பெருமா னல்லுருவை
யோவியமாத் தீட்டி யுவந்தளித்தான் - தேவியரை
214✓
யாரென்றாள் மானி னமரர் பெருமானின்
சீருயரு மக்கள் தெரியென்றான் - நாரியரைப்
215✓
பார்த்துப் பெருமூச் செறிந்துபரன் பக்கத்தே
சேர்த்தவ ளையுமெழுதச் செப்பினாள் - கூர்த்தமதி
216✓
கொண்ட கரவலவன் கூறுவான் கந்தனடி
யண்டவெல் லோர்க்குமெளி தாகுமோ - பண்டைநா
217✓
ளில்லா வழியே யிவனெழுதி னானென்றே
யெல்லோரு மென்னை யிகழுவார் - நல்லாய்கே
218✓
ளின்றிறைவன் போது மினியவுலாக் காட்சியினி
னன்றுநினைக் கண்டனனே னாளையவ்வா - றொன்றெழுதி
219✓
யீவே னெனவுரைத் தேகினா னோவியன்
மாவேள் மணித்தே ருடன்வந்தான் - பாவைமறு
220✓
கேகிச் சிகிகளுட னெம்பெருமா னையிறைஞ்சிப்
பாகனைய சொல்லுடையீர் பாங்கிமீர் - நாகியரோ
221✓
டியானு மொருத்தியா விவ்விளைஞன் பாலிருக்க
வேனாகா தென்ன வியம்பினாள் - மானமுறு
222✓
தோழியரு மாதே சொலுமப்பன் காபாலி
வாழியனை யோநன் மலைநீலி - சூழுமம்மான்
223✓
வெண்ணெய் திருடி விளங்குமுன்னோன் மாவயிற
னண்ணலிவ னிப்பரிசுக் காகவோ - யெண்ணுமயல்
224✓
கொண்டாய் மிகவென்று கூறி யுடனகைத்தார்
வண்டாருங் கோதையொன்று மாறுரையாள் - தண்டாரா
225✓
ரும்பர் பெருமா னுயர்குமரன் சேயினையை
நம்பன் றிருத்தேர் நடத்தினான் - கும்பமலைக்