மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
திருவாபரணம் புனைந்தருளுதல்5 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
திருவாபரணம் புனைந்தருளுதல்
86✓
பொற்றூச தார்த்துப் புறங்கச்சு வீக்கியிரு
ஞற்றதென வோது முயர்குழலை - முற்றுமறைத்
87✓
தம்பொன் மகுட மணிந்து கதிர்முழுது
மிம்பரிணில் வந்ததென வெண்ணவே - கம்படரும்
88✓
வச்சிரநற் றோடு வளர்ந்திலங்க நன்னுதலி
னிச்ச முயர்திரு நீறணிந்து - மெச்சுமடைக்
89✓
காயருந்திக் கந்தரத்துக் கண்ட சரமணிந்து
மேயமுத்து மாலை விளங்கவொளி - நாயகமாஞ்
90✓
செம்பருதி யென்னத் திகழ்மகரி நற்பதக்கஞ்
சம்பருளு மக்கமணி தான்மலைந்து - நம்பரன்றன்
91✓
தோளிடைநற் கேயூரஞ் சூட்டிவலி யாகமிசை
வாளொளிசெய் மின்னல் வளைந்ததெனக் - கோள றுநூல்
92✓
சூட்டியரை ஞாணரையிற் றோன்ற மணிக்கடகம்
பூட்டிநவ கோளும் பொலன்கழல்கள் - வேட்டதனைப்
93✓
பற்றியதே போலப் பகரு நவமணிகள்
முற்றொளிசெய் நூபுரமு முன்னணிந்து - கொற்றப்
94✓
பிரணவத்தை யன்பர் பெரிது நினைந்து
சரண மெனத்துதிக்கத் தங்கும் - பெருநல்வான்
95✓
வில்லென்ன வம்பொன் வியன்றிரு வாசியுற
மல்லர் கொடிதழுவு மாவுரத்துச் - சொல்லரிய
96✓
கந்தங் கமழும் களபகத் தூரியணிந்
தந்தமிலா மேனி யழகதனை - முந்து
97✓
சுருதி மிகத்தேடித் தோன்றறியான் சோதிப்
பருதிநிலைக் கண்ணாடி பார்த்து - முருகுவளர்
98✓
மல்லிகை முல்லை மருக்கொழுந்தி னாற்றொடுத்த
பல்லியலார் கோதை படர்ந்திலங்க - மெல்லியலார்
99✓
இன்ன லுறமயின்மீ தேறி முரசொலிப்பப்
பன்னு முழவதிரப் பண்புடனே - நன்னயமார்
100✓
சங்கந் தொனிப்பவுயர் தக்கை குழல்பேரி
துங்க முழவுதிண்டி தூரியங்கள் - பொங்கவிசை
101✓
நாக சுரமதிர நாரதருந் தும்புருவும்
வேகவிசை பாடவரை வெம்முலையா - ராகத்
102✓
தெழுகளை நீங்க விருகவரி வீசப்
பழுதி லடியார் பணிய - முழுது
103✓
மலக்கணற வந்திக்கு மன்பர் பவத்தை
விலக்குவபோ லாலவட்டம் வீசத் - துலக்குமுறை
104✓
வல்லோர் மறைமுழங்க வான்புறவம் வந்தோனுங்
கல்லேநற் றோணியெனக் கண்டோனு - நல்லநிதி
105✓
யாற்றிலிட்டுச் சம்பருளா லாளூர்க் குளத்திலெடுத்
தேற்றுபெரு மானு மிறைசிவனைத் - தோற்று
106✓
நரிபரியே யாக்க நடத்தும் பிரானு
முறையேசெய் நூல்கள் முழங்கக் - குறைவின்றி
107✓
யாண்ட வருணகிரி யண்ண றிருப்புகழுங்
காண்டகுசீ ரோங்கிக் கறங்கவருள் - வேண்டடியார்
108✓
பல்லாண்டு கூறப் பரந்து சயசயவென்
றல்லாண்ட கூந்த லணிமுலையார் - மல்லாண்ட
109✓
திண்டோள்கள் கொள்ளுந் திருட்டிபரி காரமா
வெண்டோட்டுக் கைகள் விரித்துப்பொன் - தண்தட்டி
110✓
லாலத்தி சுற்ற வணிமிகுவா யில்கடந்து
கோலப்பூம் பட்டுக் குடைநிழற்றச் - சீலத்தேர்
111✓
விண்ணவர்க ளைந்தருவின் விண்பூ மழைபொழிய
மண்ணவர்க டன்னாமா வாழ்த்தெடுப்பப் - பண்ணமருந்
112✓
தெய்வானை வள்ளி திகழ வருள்மாரி
பெய்வான நாதன் பெரிதேறி - மைவான