முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
மடந்தை12 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

மடந்தை

248✓
யாறினா ளங்கொருத்தி யாயு மிழைமடந்தை
மாறில் மதவேளின் வான்கரும்பு - கூறுமதன்
249✓
காமச் சுவையமிர்தங் காமப் பெருஞ்செல்வ
நாமத் திருத்தணியி னற்சுனையிற் - சாமக்
250✓
கருங்குவளை யில்வளருங் காமருபூந் தும்பி
பருங்கொன்றைக் காயளக பாரஞ் - சுருங்குநுதல்
251✓
விற்கோல மானாள் விழியாலங் காட்டினாள்
மற்கோண மெட்பு வணத்தினாள் - சொற்பால
252✓
வெண்முல்லை வாயினாள் மேவுவஞ் சைக்களத்தாள்
வன்முலைகள் வல்லமெனு மாணிழையாள் - பண்மொழிகள்
253✓
பாலொடுதேன் கூடலாள் பாரிலிடை வஞ்சியாள்
மாலுதரங் குற்றால வாய்மையாள் - சாலவே
254✓
மார னுருவனைய வஞ்சியிற் காஞ்சியாள்
சீரூறுமா யூரமெனுஞ் செவ்வியா - ளாரல்குல்
255✓
மாநகர் கோவிலாள் வாழ்கஞ்ச னூரன்ன
சீநடையாள் சேடியினை நோக்கியே - நானிரவிற்
256✓
பஞ்சமலர்ப் பாயற் படுத்துறங்குங் கற்கனவி
லஞ்சுகின்ற வேலினா ராறுமுக - மெஞ்சலிலாப்
257✓
பன்னிரண்டு செங்கைகள் பாரக் கதம்பமலர்
மன்னியவண் வந்தனரால் மாசகன்று - துன்னுநீ
258✓
ராரென்றே னெந்தயை யணிமயிலா ரென்றார்
நீரென்றே னென்பிறப்பு நீரென்றார் - நீரெந்த
259✓
வூர்நாடென் றேனல் லறவேநா டென்றுரைத்தார்
பேர்மாதே வாவென்றேன் பின்னுமவ - ரோர்மாதே
260✓
வாவென் றுரைசெய்தார் வானவா சம்போகந்
தாவென் றுரைத்தேனச் சண்முகனு - மாவின்று
261✓
சம்போகந் தாவென்று சாற்றினா ரிவ்வேளை
வெம்பாகாஞ் சொல்லாய் விழித்திட்டே - னம்பியிதற்
262✓
குற்ற பலனை யுரையென்றாள் சேடியுமுன்
வெற்றி மயூரமலை மேவினோன் - சொற்றகைய
263✓
வள்ள லுனைப்போற்ற வந்தானென் றென்கருத்தி
லுள்ளுகிறே னென்ன வுவந்திருந்தாள் - கள்ளமலர்
264✓
மாலையான் மாயூர மாமலையா னவ்வழியே
கோலச் சயந்தனத்துக் கூடினான் - சாலவிவ
265✓
ணின்று கரங்குவித்தா ணீள்காமப் பித்தேறி
யொன்று மறியா துருகினாள் - தென்றல்வேள்
266✓
வில்லம்பு பட்டு மெலிந்தாண்முன் னாட்கண்ட
நல்லகன வெண்ணி நலிந்திட்டாள் - சொல்லுவளை
267✓
நீங்கினாள் கந்த நிமலன் புயத்துக்கா
வேங்கினா ளாறுமுக வெம்பிரா - னாங்கிருந்து
268✓
செவ்வேள் திருத்தேர் செலுத்தினா னன்னையணைந்
வா றிரங்கு மிளமகளின் - செவ்வியறிந்
269✓
தாய்சேயை நோக்கி யணியா ரிருமனையை
மேயநீர் சேயை விரும்பினீரோ - வாயவிவள்
270✓
கைவளையில் லாதுமது கைவளைகள் மேவாதோ
மெய்வளரு மேகலையை யன்றியுமக் - கைவளரு
271✓
மேகலையின் றோமகளின் மென்றுகிலல் லாதுமக்
காகுந் துகிலொன் றறியீரோ - வேகமா
272✓
யித்தொழிலைச் செய்யவோ யிங்கணைந்தீ ரென்றறைந்து
தத்தைமொழி யன்னை தனதில்ல - நத்தினா