முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
அதுநல்ல திதுதீய11 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

அதுநல்ல திதுதீய

10✓
அதுநல்ல திதுதீய தவர்பெரியர் இவர்சிறியர்
அதுஉண்மை இதுபொய்யென
அஞ்ஞான இருளிலெது சரியென்று தெரியாமல்
ஆடுங் குரங்காகினேன்
பதிமனைவி யுறவுகளும் அதிகார உரிமைகளும்
பாங்காக வருநிதிகளும்
பட்டங்கள் பதவிகளும் திட்டங்களும் பாரில்
பலவசதி சுகமனைத்தும்
நதியருகு மரமாக அதனுனியில் ஒருகூட்டை
நாடிவரும் பறவையானேன்
நலிவுதரு மோரைந்து புலவேடரின் துணையை
நம்பிஏ மாப்படைந்தேன்
சதியுடைய இருகொள்ளியுள் ளெறும் பானஎனைத்
தள்ளாது காத்தருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.