முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
கருணைமுரு காசோதி13 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

கருணைமுரு காசோதி

12✓
கருணைமுரு காசோதி ஞானமுரு காஆதி
கைலேசன் தந்தமுருகா
கற்றவர் விழுங்கிடும் வெற்றிமுருகா அன்பர்
கருத்திலே இருக்கும்முருகா
அருணகிரி நாதனுக் கருளும்முருகா படைகள்
ஆறில்விளை யாடும்முருகா
அசுரனைக் கூறிட்ட நெடியமுருகா வேத
ஆகமம் சொன்னமுருகா
மருணெறி யொழித்துனது பெருநெறி பிடித்தொழுக
வரமுதவும் பரமமுருகா
வல்லமுருகா வள்ளி குஞ்சரி மகிழ்ந்திடும்
மயிலேறும் அழகுமுருகா
தருணமழை யாகிவரும் சத்திமுருகா எங்கள்
சஞ்சலம் தீர்க்கவருவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.