முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
திருமகள் தருவள்ளி9 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

திருமகள் தருவள்ளி

8✓
திருமகள் தருவள்ளி செய்யுமா லோலமெனும்
தேவாம்சத் தொனியுணர்ந்து
செந்தினை வனத்தோடித் “திருமணம் செய்”யென்ற
சிவவேட னானமுருகா
விரவுகாம் போதிநிரை மேய்த்தன்பு மாதரொடு
விளையாடுங் கண்ணன்மருகா
மெய்யுருகு வார்பாடும் ஹரஹரப் பிரியனே
மேவுசக் கரவாகனே
அருமறை தந்தவா ஆனந்த பைரவி
அணைக்கும் ஸ்ரீசண்முகா
அங்கையினில் ஓடேந்தித் தன்யாசிப் பாலிந்த
அண்டங்கள் காக்குமீசன்
தருமழலைக் குருபரா தமிழ்மோகனா நினது
தாளிணைத் தேனருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.