முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
வளர்மதிய மொருகோடிப்3 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

வளர்மதிய மொருகோடிப்

2✓
வளர்மதிய மொருகோடிப் பிரகாச மேனிதிகழ்
வள்ளிமகி ழும்செல்வனே
வண்ணமயி லேறிநற் புண்ணியர் மனத்திலே
வாழும் சிவச்செல்வனே
ஒளிர்வதன மோராறும் முறுவலுற வந்தின்பம்
ஊட்டியரு ளும்செல்வனே
ஓங்குபர மானந்த பாங்குமிளிர் சிவஞான
உத்தமி தரும்செல்வனே
கிளர்முதிய சூராதி யவுணரைப் பொடிசெய்த
கிரணவடி வேற்செல்வனே
கீரனுட னருணகிரி குறுமுனிவ ரௌவைதமிழ்
கேட்டுமகி ழும்செல்வனே
தளர்வுடைய சிந்தையொரு நிலைபெறு மனோலயச்
சாந்தசுக மீந்தருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.