முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
எண்ணுஞ் சுகங்கள்வரும்15 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

எண்ணுஞ் சுகங்கள்வரும்

14✓
எண்ணுஞ் சுகங்கள்வரும் ஏகாந்த வாழ்வுவரும்
இருள்போக்க அருளும்வரும்
இறவாத பிறவாத பெருவாழ்வு வருமென்றும்
இகழிலாப் புகழும்வரும்
திண்ணமிகு மனஉறுதி திகழட்ட சித்திகளும்
தெய்வீக வடிவும்வரும்
சித்தசுத் தானந்த பத்திவரும் புத்திவரும்
சீவகா ருண்யம்வரும்
பண்ணுடைய கலைகள்வரும் விண்ணவரின் நிலைகள்வரும்
பாக்கிய மனைத்தும்வரும்
பரநலம் செய்யவரும் பார்க்குமிட மெங்குமுன்
பயிலழகு தெரியவும்வரும்
தண்ணருள் முருகனே எண்ணிவந் துன்செல்வச்
சந்நிதியைத் தொழுதவர்க்கே
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.