முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
சிவயோக வெள்ளமே14 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

சிவயோக வெள்ளமே

13✓
சிவயோக வெள்ளமே அருளூறும் வெல்லமே
தேவரறி யாதபழமே
“சிவயநம” “நமசிவய” மந்திர நலந்திகழும்
சிவசூப்ர மண்யகுருவே
பவளமலை மீதுமர கதநில வெறிப்பநடை
பழகுமொரு மழலைவடிவே
பரவுமறை யாகம புராணமொடு திருமுறைகள்
பாடிப் படைத்தமுடிவே
புவியாதி பூதமே விந்துகலை நாதமே
பொருளான சுகபோகமே
பொற்புடைய கற்புமணம் களவுமணம் விளைவுதரும்
புனிதம் விளக்குமரசே
தவியாத உள்ளமுண ரவிரோத ஞானத்தின்
தத்துவ முணர்த்தவருவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.