முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
பரமசிவன் மைந்தனே2 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

பரமசிவன் மைந்தனே

1பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்✓
பரமசிவன் மைந்தனே கணபதியின் தம்பியே
பார்வதி யணைத்தகுகனே
பகவனின் மருகனே பண்பார் விசாகனே
பன்னிரு கரத்தழகனே
மரகத மயூரத்த சச்சிதா னந்தசிவ
மங்கள சொரூபத்தனே,
வான்தந்த குஞ்சரியும் மான்தந்த வள்ளியும்
வந்துமரு வும்செல்வனே
அரகரா குருபரா அப்பனே முருகனே
ஆறுமுக வேல்ரசனே
ஐயனே எனஓதும் அடியார்கள் முன்தோன்றி
அபயவர தங்கொடுக்கும்
சரவணபவா நினது சரணமலர் சந்ததம்
தமியேன் நினைக்கஅருள்வாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.