முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
சிங்கார மனையுண்டு17 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

சிங்கார மனையுண்டு

16✓
சிங்கார மனையுண்டு குறையாத நிதியுண்டு
சீர்பூத்த மைந்தருண்டு
செழுமைதரு நிலமுண்டு வழுவாத குலமுண்டு
திருவளரும் வாழ்க்கை யுண்டு
மங்காத புகழுண்டு வாடாத மனமுண்டு
மாண்பான கலைகளுண்டு
மதியுண்டு பரவுசிவ கதியுண்டு மனுநீதி
வயல்பூத்த அருளுமுண்டு
வங்கார தொகையுண்டு வண்ணமிகு முடையுண்டு
மட்டிலாச் சித்தியுண்டு
மலையுண்ட வேலவா நினதடியை நெஞ்சினில்
வைத்துண்டு வாழ்பவர்க்கே
சங்கீத ஆலோல வள்ளிதரு தினையமுது
தலையசைத் துண்டமுருகா
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.