முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
மங்கள மிகுந்தவேல்5 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

மங்கள மிகுந்தவேல்

4✓
மங்கள மிகுந்தவேல் வானவர் துதித்தவேல்
மாமலை தடிந்தவடிவேல்
வரைமே லமர்ந்தவேல் மந்த்ரவடி வானவேல்
மண்டல நிறைந்தநெடுவேல்
சிங்கமா சூரனொடு கஜமுகன் கொண்டநாற்
சேனையைத் துகள்செய்தவேல்
சேவலொடு மயிலான காவலன் போற்றிடும்
சிங்கார வைரமணிவேல்
மங்கைகுற வள்ளிதனை மங்கலம் பூணவரு
வனவேடன கொண்டகைவேல்
மாகடல் குளித்தவேல் மாமர மறுத்தவேல்
மறைதந்த அருணகிரிவேல்
சங்கரன் தந்தவேல் சக்திவேலே நினது
தாடலை சுமக்கஅருள்வாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.