முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
ஆதிக்குமரா மயிலில்4 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

ஆதிக்குமரா மயிலில்

3✓
ஆதிக்குமரா மயிலில் ஆடுங்குமரா அன்னை
அம்பிகை நயந்தகுமரா
அகிலாண்ட கோடிகளை யாண்ட குமராநித்தம்
அன்பர்மனம் மேவுகுமரா
சோதிக்குமரா அமிர்த வல்லி சுந்தரவல்லி
துணைவனாய் வந்தகுமரா
சூரகுல சங்கார வீரகு மராதமிழ்ச்
சொற்புலவ னானகுமரா
நீதிவடி வேல்கொண்ட வேதக்குமரா கல்வி
நிதியருளும் முதிய குமரா
நித்தியகல் யாணக்கும ராஅன்ன தானத்தின்
நெறிபய னுரைத்தகுமரா
சாதிகுல பேதமெனும் சந்தேகம் தெளிவுபெறும்
சன்மார்க்க நிலையருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.