முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
அவமருவு மூவாசை10 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

அவமருவு மூவாசை

9✓
அவமருவு மூவாசை யாற்றினைத் தாண்டிமன
அமைதிதரு மினிமைபெறவும்
அருளொழுகு தெய்வீக அறிஞரைப் பின்பற்றி
ஆனந்த நிலைகொள்ளவும்
பவமருவு வினைகோடி ஓட “முருகா”என்று
பகலிரவு கவிபாடவும்
பந்தனை யழிந்துனது சிந்தனை மிகுந்துவரு
பரவெளிச் சிரம்நாடவும்
சிவமருவு மந்திர செபம்புரிய வுந்தூய
திருநீ றணிந்துருகவும்
சீரடியர் குழுவிலே ஓரடிய னாகிமிகு
தேவார இசைபாடவும்
தவமருவு முறையினாற் கவலைகள் ஒழிக்கவும்
தந்திரந் தந்தருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.