முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
ஒருமுகங் கதிர்விரிந்7 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

ஒருமுகங் கதிர்விரிந்

6✓
ஒருமுகங் கதிர்விரிந் துலகெலாங் காத்தருளும்
உண்மைதரு மன்புடையவர்க்(கு)
ஒருமுகங் களிகொண்டு வரநலம் செய்திடும்
ஓதுமறை வேதியர்தமை
ஒருமுகம் வேள்விவிதி வழுவாது கவனிக்கும்
ஒண்கலைத் திங்களைப்போல்
ஒருமுகம் வேதசாஸ் திரநுட்பம் தெரிவிக்கும்
உக்கிர மனத்தினுடனே
ஒருமுகம் மருவுபோர்க் களவேள்வி யதுநுகரும்
உள்ளமிக நகையமர்ந்தே
ஒருமுகம் வள்ளியுட னுல்லாச வாழ்வுகொளும்
ஓராறு முகமுமொத்துத்
தருமுகங் கொண்டெமது வறுமைபிணி துயரகலத்
தண்முறுவல் பூத்துவருவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.