முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
ஆவகை வதைத்திடுதல்12 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

ஆவகை வதைத்திடுதல்

11✓
ஆவகை வதைத்திடுதல் அந்தணரை வைதிடுதல்
அரிவையரை நெறியழித்தல்
அறிஞரைத் தூற்றிடுதல் ஆகமம் மாற்றிடுதல்
ஆய குருவைப்பழித்தல்
மேவுகொலை களவுபொய் யோதுமது கொள்ளுதல்
மெய்யுருகு தந்தேதாயை
வேதனைப்பட வைத்தல் சூதுவினை செய்திடுதல்
விளையுமுன் கதிரறுத்தல்
தேவருறை ஆலயக் குறைபுரிதல் அறியாத
சிறுமையரை ஏமாற்றுதல்
தீயஇத் தகைபாவம் எத்தனை செய்தனோ
சிறுமையேன் பிழைபொறுத்துத்
தாவுதிரி சூலமொடு பாசமுறு காலனெனைத்
தாக்காமல் வந்தருளுவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.