முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
பண்டைவினை தீர்த்துனது6 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

பண்டைவினை தீர்த்துனது

5✓
பண்டைவினை தீர்த்துனது பக்தரைக் காக்குமயில்
பஞ்ச வர்ணங்கள்எங்கும்
பரவுமோங் காரமயில் பன்னக மிதித்தமயில்
பகைவரை யடக்கவீசும்
சண்டமா ருதநிகரத் தாவிப் பறக்குமயில்
சச்சிதா னந்தநிலையைத்
தன்வடிவிற் காட்டுமயில் பொன்னுலக ஆட்சியில்
சலியாத நிருதரழிய
மண்டுபெரு போர்க்களம் கண்டுநட மாடுமயில்
மதுரஒரு கனிகிடைக்க
வருகோடி கோடிபல அண்டங் கடந்துவரும்
மயிலேறு முருகேசனே
தண்டமுறு நிரயமணு காதுனைத் தரிசிக்கத்
தங்கமயி லேறிவருவாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.