முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
கொந்தார் கடம்பனே16 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

கொந்தார் கடம்பனே

15✓
கொந்தார் கடம்பனே தந்தைநீ தாயும்நீ
குலவுமுற வோர்களும்நீ
கூடுமனை மக்கள்நீ நாடுமுயர் செல்வம்நீ
குறைதீர்க்கும் அரசனும்நீ
செந்தாமரைச் செல்வி வெண்டாமரைச் செல்வி
செய்கருணைக் கதிபனும்நீ
சிந்தனைக் கெட்டாத குமரன்நீ அன்பரின்
சீரான தோழனும்நீ
நொந்தாரின் துயர்தீர்க்கும் சஞ்சீவி நீசகல
நூலறியும் புலவனும்நீ
நுவலரிய எங்கள்துரை நீயென்று பவமான
நோய்போக்க உனைநாடினேன்
சந்தேக மானஇத் தேகத்தினா லமுத
தவமுத்தி பேணவைப்பாய்
தண்பரவை தொண்டைமா னாறுதழுவும் செல்வச்
சந்நிதிக் கந்தவேளே.