முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
சென்னிநகரச் சிறப்பு16 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

சென்னிநகரச் சிறப்பு

✓
தடங்கரைச் சங்கத் தவளவெண் முத்தின்
நிலவொளிக் குமுத நெகிழ்ந்துவாய் விரியத்
தென்றல் வரவால் திருமகள் விழையும்
✓
தாமரை மலரத் தண்புனல் நிறைந்த
வாவியு மோடையும் வன்கலிற் சுனையும்
பொறிவரிச் சுரும்பும் பூவையுங் கிளியுங்
குயிலு மிவற்றின் குரலொலி நிறைந்த
பூவார் சோலைப் பொதும்பருஞ் சூழத்
✓
தேவர் வாழிடங்கள் செறிதர நடுவிற்
சுடர்மணிக் கோபுரந் துலங்குற விளங்குங்
கயிலை மால்வரைக் கடவுள்தன் கோயிலும்
தேர்நிலை யிடமும் திருவிழாச் சிறப்பும்
நூலிழை யனைய நுண்ணிடை மடவார்
✓
கலாப மயிலிற் களிப்புற நடித்து
மின்னென நுடங்கி விளையாட் டயரும்
மலைநிகர் மாட மாளிகை நிரையும்
யாறுசூழ் கிடந்தென வகன்பெரு வீதியும்
கால்கொணர் பொருளும் கலங்கொணர் பொருளும்
✓
பொன்னும் மணியும் பொலிதர விலைசெய்
ஆவண வீதியு மடியவர் மடமும்
பொன்னகர் தனிலும் பொலிவுற விளங்கும்
சென்னிமா நகரம் சீருறத் தழீஇத்
தாமரை பயின்ற நான்முகத் தொருவனும்
✓
ஆழிசேர் மாலு மகலிரு விசும்பிற்
காவல் வேந்துங் கவின்மிகு தேவரும்
முனிவரும் பிறரு முறைமுறை சிரஞ்சேர்
கரத்தின ராகிக் கண்களி கொள்ளப்
போற்றி வணங்கப் புகலிரு விசும்பில்
✓
ஆயிரங் கிரணத் தலர்கதிர் ஞாயிறும்
மாயிரு மதியமு மற்றுள கோள்களும்
வலமுறச் சூழ மகிழ்வுட னென்றும்
நின்றுயிர்க் கருளு நிலையினைக் கொண்டு
மன்னுறுஞ் சென்னி மலைகிழ வோனே!