முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
செவ்வேள் பரிசில் நல்குதல்15 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

செவ்வேள் பரிசில் நல்குதல்

✓
எனவுன் குறிப்பை இயம்பா முன்னந்
தன்னுளங் குறித்துத் தண்டமிழ்ப் புலவன்
வருத்தமுற் றயர்ந்து வண்டமிழ்த் துதிகள்
வளமுறப் பாடி வந்தன னாகலின்
✓
அளிசெயத் தக்கான் அளிசெயத் தக்கான்
என்றருள் கொண்டுன் னூழ்வினை யேகக்
கடைக்கணித் தருளிக் கவிமதிப் புலவ!
அஞ்சலென் றருளி யகலிடத் தோர்கள்
உயர்ந்தவ னீயென் றுரைத்திடு மாறு
✓
அறம்பொரு ளின்பம் வீடெனு நான்கின்
திறமுறும் பொருள்கள் சீர்பெற வருளுவன்