முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
புலவர் வறுமை3 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

புலவர் வறுமை

✓
மான முதலா மருவிய பத்தும்
பறந்திடச் செய்யும் பசிப்பிணி யதனால்
ஒட்டிய வயிற்றொ டுறுவிலா வென்பு
✓
இருமருங் கினிலு மெழுந்துநிற் றலினால்
வங்கினைப் பற்றும் வல்லுடும் பதனை
யுரித்துவிட் டாற்போ லுடம்பினை யாயினை
கந்தை யுடையுங் கைதனிற் கிழிந்த
புத்தகக் காட்சியும் பொலிதர வந்தனை.
✓
முத்தமிழ் சொரிதலின் மும்மத யானை
போன்ற புலவ! பூனைபோ லாயினை
வெயில்படக் கிடந்த மென்மல ரதுபோல்
வாடினை மேனி வருந்தினை யந்தோ!
புலவர்தம் வறுமை பொல்லா தன்றோ?
✓
காற்று மழையுங் கடுங்கதிர் வெயிலும்
ஒன்றுபி னொன்றா யுறுதுயர் செய்யும்
ஓட்டை மிகுந்த வோலையில் லத்தில்
வறுமைப் பேய்கொள வருத்தமுற் றயர்ந்து
தலைக்கிடு மெண்ணெய் தான்கா ணாமல்
✓
மஞ்சள் பூசாது மதிமுக நுதலிற்
றிலக மிடாமல் திகழுற முன்பு
கட்டுநூற் கழுத்துங் கந்தைசூழ் இடையும்
உணவு காணாம லொட்டிய வயிறும்
துயர்கூர் முகமுந் தோன்றுறு மனைவியும்
✓
“அம்மா! பசிகா தடைக்குதென் செய்கேம்
உப்புநீர்க் கஞ்சி யொருவாய் தாராய்”
என்றழு தேங்கு மிளமைகூர் சிறாரும்;
உறுதுயர் கண்டே யுளமிகக் கலங்கிச்
செய்வ தொன்றுந் தேர்ந்தறி யாமல்
✓
அவர்வயிற் றுணவும் அரைதனி லுடையும்
முகத்திற் பொலிவும் முன்னுறப் பெற்று
வாழ்வுறக் காண மனத்தினி லெண்ணி
அன்னவர் தம்மை யரிதினிற் பிரிந்து
காடை காகங் கட்டிடக் கண்டும்