முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
மருத நிலம்11 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

மருத நிலம்

✓
வெண்ணிறந் தழீஇய விளங்குநாற் கோட்டு
ஐரா வதப்பிட ரணிமணிக் குடைக்கீழ்
✓
பொன்னரி மாலை பொலிமணி மகுடமும்
வச்சிரப் படையும் வல்லிடிக் கொடியும்
வலமுறத் தாங்கிய வானவர் தலைவன்
காம தேனுங் கற்பகச் சோலையும்
சிந்தா மணியுஞ் செழுநிதிக் குவியும்
✓
அமுதமும் போகமு மரம்பையர் நடமும்
களியுறப் பெற்ற கண்ணா யிரத்தோன்
உலகுயிர் புரக்கு முயர்மழைச் செல்வன்
ஐந்தருச் செல்வி யகமகிழ் நாயகன்
மகட்கொடை வேட்கு வழங்கிய புகழ்சால்
✓
இமையாச் செங்க ணிந்திரக் கடவுள்
காவல் கொள்ளுங் கடிமலர்ச் சோலையும்
செந்தா மரையுஞ் செங்கழு நீரும்
பூத்துப் புனல்வழி பொய்கையிற் பெடையொடு
அன்ன மாடும் அகன்றுறைக் காட்சியும்
✓
மருதங் காஞ்சி மரநிழற் பொதும்பர்
மள்ள ருழத்தியர் வளர்குழல் நீவி
யூடல் தீர்க்கு முவப்புறு காட்சியும்
அரக்கித ழாம்ப லரும்பினை மேய்ந்து
குண்டுநீர்க் குட்டை குழிகளின் மூழ்கிக்
✓
கலங்கிய நீரைக் களிமிக வருந்தி
மாவி னீழல் வளமுறத் துயிலும்
கயவாய்க் கோட்டுக் காரான் குழுஉவும்
நிலத்துக் கணிசெய் நெல்லுங் கரும்பும்
பாளைக் கமுகும் பைங்குலைத் தெங்கும்
✓
பாசடை வாழையும் பலாவும் வஞ்சியும்
மடைநீ ரொலியும் வரம்பிடை மணியும்
களைகளை மகளிர் கள்மது வுண்டு
மழலைக் கிளியின் மகிழ்வுறப் பாடலும்
வருபுன லாடலும் மன்றணி விழாவும்
மல்கிய நீர்மலி மருதத் திணையும்