முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
சென்னிமலைமேல் செவ்வேளைத் தரிசித்தல்13 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

சென்னிமலைமேல் செவ்வேளைத் தரிசித்தல்

✓
வானுற வளர்ந்த வளமிகுஞ் சிகரச்
சென்னிமா மலையிற் செல்குவை செல்லின்
✓
அம்மலை வழிமுத லமைவுடன் விளங்கும்
மலைவழி யேழு மாமுகற் போற்றி
மலைகா வடிகொள் மலைகா வலனாம்
மலையடி வார மண்டபத் தமரு
மிடும்பக் குமர னிணையடி பணிந்து
✓
வழித்துணை யாகென மலைமிசை யேறி
செழிப்புறு முச்சி சேர்ந்தினி தருளும்
அந்தி வணம்போ லழகொளிர் மேனிச்
சந்தி விநாயகன் றாண்மலர் தொழுது
அண்டர் மாதவரு மருமறைக் குழாமு
✓
மெண்டிசை யோரு மின்புறப் போற்ற
நந்தா வளமருள் நறுமணம் பொலியுஞ்
செந்தா மரைமலர்த் திருவடித் துணையும்
இடைப்பட் டிகையு மிலங்குகோ வணமுந்
தொடைமலர் மாலை துலங்குநூன் மார்பும்
✓
வேத்திரத் தண்டம் விளங்கு கைத்தலமுஞ்
சாத்துடை யிடையிற் சார்ந்த கைத்தலமும்
ஒளிவளர் குழைதா முறுசெவித் துணையு
மளியுற நோக்கு மலர்விழித் துணையும்
பூத்தபுன் சிரிப்புப் பொலிதனி முகமும்
✓
பின்றாழ் சடையும் பிறங்கநின் றுலக
நன்றா மாறெந் நாளும் புரக்கு
மரன்றிரு மதலையை யயில்வேற் கரனைக்
சிரங்கை குவித்துத் திருவடி தாழ்ந்து