முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
முல்லை நிலம்10 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

முல்லை நிலம்

✓
ஆழி சங்க மடுகதை வில்வாள்
பாழி நெடுங்கைப் பரூஉமல ரேந்திய
திருவுறை மார்பிற் றிருமா லென்னுங்
காயா மலர்நிகர் காட்சிகொள் மேனி
மாயோ னுறையும் வளம்மிகு காட்சியும்
ஆயர் பாடியும் ஆன்மணி யோசையும்
✓
குடவர்வேய்ங் குழலும் குடத்தியர் குரவையும்
நாவலர் வண்டு நல்லிசை பாடக்
கானியாற் றடைகரைக் கவின்பெற மலர்ந்த
குருந்துந் தோன்றியுங் கொழுநெடுங் காதிற்
புல்வாய் முயலும் பொலிகான் கோழியும்
✓
கார்விளை யெள்ளுங் கவின்கதிர் வரகும்
குல்லையு மேவிய குறுமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற முல்லையந் திணையும்