முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
பூந்துறை நாடு8 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

பூந்துறை நாடு

✓
நாட்டின் சிறப்பும் நானில வளமும்
மலைமேல் முருகன் வளர்புகழ் பாடலும்
பாட்டிற்கு வந்தவன் பரிசருள் திறமும்
சிறப்பு முறையிற் றெரிதரக் கூறுவல்
அன்புறக் கேட்டி யருந்தமிழ்ப் பாவல!
✓
ஆதவன் சூழு மகன்றிரை யுலகின்
மாதவஞ் செய்த மாண்புறு திசையெனுந்
தென்றிசை யதனிற் செழிப்புற விளங்கி
வடதிசை வேங்கடந் தென்றிசைக் குமரி
குடதிசைக் குரைகடல் குணதிசைப் பௌவம்
எனுநான் கெல்லையு ளியல்புறக் கிடக்குந்
✓
தகுபொருள் விரித்த தண்டமிழ் நாடு
வடிதமிழ் வலத்தால் வழிவழி வளர்த்த
முடிகெழு வேந்தர் மூவரும் புரந்த
சேரஞ் சோழம் பாண்டியங் கொங்கு
தொண்டை யென்னுந் தொல்பெயர் படைத்து
✓
ஐவகைப் பிரிவா மவற்றினுட் கொங்கு
நீர்நில வளத்தால் நிகரில தாகிச்
செல்வமுங் கல்வியுஞ் சீர்தரு மீகையும்
வீரமும் புகழும் விளங்குறு நாடாம்
பிறைமுடிக் கண்ணிப் பெருமான் செஞ்சடை
✓
திசையகம் பொலியத் திருநட மியற்றும்
அம்பலந் திகழு மணிகெழு காஞ்சிவாய்ப்
பிறவாப் பழனப் பேரூர்ப் பதிமுதல்
இறவாச் சிவதல மெண்ணில திகழ்வது
மாறுகொள் சூரன் வல்லுரம் பிளந்து
✓
கூறுசெய் வேலன் குடிகொண் டிருக்கும்
ஆறு படைவீ டாமெனுந் தலத்தில்
வீறுகொ ளேரக வெற்பெனுஞ் செங்கோ
டாறுகா விரிவா யணிகொள வுடையது
இமிழ்கடல் ஞாலத் தீடிணை யின்றித்
✓
தமிழ்ச்சுவை யெல்லாந் தாமொரு வடிவாய்ப்
புலவர்க ளெல்லாம் புத்தமு தென்னக்
களிகொண் டுள்ளக் கவலைதீர்ந் தனராய்க்
கொள்ளைகூட் டுண்ணுங் கொள்கையின் மலிந்து
ஐஞ்சிறு காவிய வடைவினு ளொன்றாய்ப்
✓
பெருங்கா வியத்திறம் பெற்று விளங்குந்
தலைமணிக் காவியந் தானெனும் புகழ்சேர்
கொங்குவேள் மாக்கதை கொடுத்ததந் நாடு
வெண்ணைச் சடையன் வியன்குலக் காணி
நண்ணப் பெற்றது நலமுறு கொங்கம்.
✓
மங்குறோய் மாட மதுரையிற் சொக்கர்
கொங்குதேர் வாழ்க்கை யெனுங்கவி முதலின்
மங்கலப் பேர்கொளு மாட்சிமிக் குடைய
கொங்குச் செல்வி கொளுமுறுப் பாக
இருபா னான்கெனு மெழினா டுடையாள்.
✓
அத்திரு நாடா மணிதிகழ் மகட்குத்
திகழ்முக மாகச் சிறந்திடு நாடு
புகழ்மிகப் பொலியும் பூந்துறை நாடே
தீந்தமிழ்ச் சைவச் செழுந்துறை விளக்கும்
பூந்துறை நாடு பூவள முடையது.
✓
பொன்றிகழ் குடகப் பொருவரைத் தோன்றிப்
பொன்னு மணியும் பொருதிரைக் கரத்தால்
வாரிக் கொழித்து வறட்சிமீக் கூர்ந்த
வேனிற் காலத்தும் விழைவுறப் பெருகிப்
பெட்புடன் மகவைப் பேணுறுந் தாய்போல்
✓
உலகுயி ரூட்டு முயர்கா விரிநீர்ப்
பூந்துறை பொலியும் பூந்துறை நாட்டில்