முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
ஏவலர் கூற்று41 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

ஏவலர் கூற்று

பல்லவி✓
மேயினு மையோ-குருகினம்
மேயினு மையோ.
அநுபல்லவி✓
மேய்தரு மிந்தப் புளியறை மீதினில்
மீறிய புஞ்சையில் கூறிய நஞ்சையில்
சேய்கரிப் பானுவின் மேலெழு தோப்பினும்
செங்கால் நாரையுஞ் சிங்கார மாகவே (மேயினு)
73சரணங்கள்✓
தண்ணம்பி தாமரைக் குளங்கோழி கிண்டியும்
சார்கத்தி யூற்றுட னரசடிப் பற்றும்
வண்மைப் புதுவலுந் தோப்படிப் பள்ளமும்
வாழ்கரி சல்வன மாடன் செட்டிதன்
தெண்ணீர்த் திருத்து வளர்வாசற் பிள்ளைத்
திருத்து நதிக்கரைத் தோப்பு முதலாகப்
புண்ணியஞ் செய்திடு மழகப் மாலெனும்
பூபதி தானஞ்செய் கட்டளைப் பற்றெல்லாம்(மேயினு)
எண்ணெழு தேசமும் போற்றிடச் செங்கோல்
இயற்றிய மூவ ரெணச்சொலும் பொன்புரை
வண்ணன் சிறந்த சிதம்பர நாதன்சி
வன்றுணை மைத்துன னென்றிடு வித்தகன்
கண்ணன் பரவிய நெல்லையப் பாரெனக்
கையொப்பங் கொண்டிந்தக் காசினி மீதினில்
புண்ணியந் தேடிய சாலிவா டீசுரப்
பூபதி செய்திடு கட்டளைப் புரவெல்லாம் (மேயினு)
வடகரை யாதி பதிதிரி கூடபதி
மனுராச ராச னரபதி மிக்க
திடபதி யெங்கள் பெரிய சுவாமி
சிறுகால சந்தித் திருத்துப் புரவெல்லாம் (மேயினு)
மன்னவன் பொன்னாக் குடிதனில் வாழும்
மனைகாவ லப்பெரு மாள்செய்த கட்டளை
தென்னவன் செவ்வல் வருராம லிங்கவேள்
செய்திடு முச்சந்திக் கட்டளைப் புரவெல்லாம் (மேயினு)
தரணிக் கதிபதி யிருளப்ப பூபதி
தந்திடு மைந்தன் வடகரை வாசற்
கரணிக்குஞ் செய்திடுஞ் சம்புலிங் கேந்திரன்
கட்டளைப் பற்றெல்லாம் வித்தார மாகவே (மேயினு)
நற்றாலம் போற்றிய குற்றால நாதன்செய்
நற்றவத் தால்வரு புத்திர னித்தியம்
வற்றாத செல்வன் புகழ்தொண்டை மண்டலம்
வாழ்தெய்வ நாயகன் கட்டளைப் பற்றெலாம் (மேயினு)
அருளிச்சை பூண்டு திருப்பணி செய்திடும்
அன்பு பெருகிய முத்துக்கு மாரர்
தருபிச்சைக் கட்டளை சுக்கிர வாரத்
தருமஞ்செய் கட்டளைப் பற்றுந் திருத்தெல்லாம்(மேயினு)
நல்வளஞ் சேருந்தென் காசிப் பதிவளர்
ஞான சிவன்ரறு நற்சுத னச்சுதன்
கல்வி நயந்தெரி நெல்லையப் பேந்திரன்
கட்டளைப் பற்றினி லிட்டம தாகவே (மேயினு)
தானத் தலமு நிலைமைக் கணக்குந்
தவத்தை வளர்க்கு மருத்துவு ராசன்
பான்மைக் குமார சுவாமி யுதவிய
பாலன் சிவகுரு நாதனைப் பெற்றவன்
மேன்மைப் புகழ்த்தொண்டை மண்டல தீரன்
விளங்கிய தொப்பைச் சிவப்பண பூபன்
கோன்மைக் கணக்கு ளகப்பட்ட பற்றெல்லாம்
கூட்டக் குருகிக ணாட்டக மாகவே (மேயினு)
தேசிக னெந்தை குருகும்பர மண்யவேள்
செய்த சுனைக்கரை மடத்துக்கு நற்பொருள்
பேசு நெடுவயற் பண்டாரத் தேவன்
பிரதோடக் கட்டளைப் பற்றினிற் கூடியே (மேயினு)