முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குளுவனுடைய ஏவலர் கூற்று39 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குளுவனுடைய ஏவலர் கூற்று

பல்லவி✓
வருகினுமையே-குருகினம்
வருகினு மையோ.
69சரணங்கள்✓
கருவாலி யுள்ளானுஞ் சிட்டுல்லி யானும்
காடையு மடைக்கலங் காத்தான் குருவியும்
குருகோடு கொக்கு மயிலுங் குயிலுடன்
கூழைக் கடாவுடன் சேகர மாகவே (வருகினு)
ஐப்பசி மாதம் வருந்த சட்டி
யதனிற் பவனி வருதலைக் காணப்
பொற்பணி யாடையு மாலையு மின்னப்
புனைந்த பரிசு வருவது போல (வருகினு)
செய்க்கய நல்லூர் புளியறை பண்புளி
தென்காசி நாலு துறையும் வரும்பொதி
வைக்குந் துலாத்துக் கொண்ணரை மாகாணி
வானிதி வாங்கி மகிழ்ந்து தினந்தினம்
எய்க்குந் திருப்பணிக் கல்லோலங் கொண்டெழ
ஏலோலம் போடுஞ் சனங்களைப் போலவும்
பக்கி வருகுது கொக்குத் திரளெலாம்
பாற்கடற் றெண்டிரை யார்ப்பென வோங்கியே (வருகினு)
வரத்தைக் கொடுத்திடுந் தேவாரப் பாடலும்
வண்ணத் திருப்புகழ்ச் சந்த வகுப்புடன்
உரத்திசை காட்டிய விக்ரம பாண்டிய
ஓதுவார் போலிசை கூவிக்கொண் டேகியில் (வருகினு)
70தரவு கொச்சகக் கலிப்பா✓
வார்க்கு ளடங்கா வரைத்தனத்து வள்ளிதனைச்
சேர்க்குந் தடம்புயத்துச் செவ்வேள் குவளைவெற்பில்
ஆர்க்கும் பறவையெல்லா மாழியைப் போன்முழங்கிப்
பார்க்குந் திசைதோறும் பட்சிநிரை சாயுமையே.
பல்லவி✓
சாயினு மையோ-குருகினஞ்
சாயினு மையோ.
71சரணங்கள்✓
கோயிலுங் கோல முடையவர் தோப்பிலும்
கொண்ட திருமலைப் புறத்தோப்பு மீதிலும்
வாய்மை தருந்திரு மலைப்புர மேவிய
வன்மைப் புதுக்குளப் பற்றினிற் கூடியே (சாயினு)
வாய்மை தருந்தா மரைக்குளப் பற்றிலும்
வட்டஞ் செறிகாடு வெட்டிப் புரவிலும்
மேய புகழ்த்திரு மாமலைச் சுற்றிலும்
மீறிய பண்புளி யூரின்னுங் கூடியே (சாயினு)
முருகன்றன் மங்கலந் தேமாங் கனிவயல்
முடுக்குப் புரவினிற் பொக்கணந் தூக்கியும்
இரவி குலம்வரு சோழர்கள் பாண்டியர்
இயற்கட் டளைக்கொப்பா வீந்த புரவெலாஞ் (சாயினு)