முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்10 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்

ஆனந்தக் களிப்பு - வினா✓
வித்தார மாமயி லேறிப்-பண்பை
வீதியில் வந்தவ ரார்சொல்லு பெண்ணே (வித்தார)
சித்தாதி சித்தரெப் போலே-உயர்
தேவர் குழாங்கள் மேயொருக் காலே
சத்தாதி தாள முழங்கப்-பேரி
சல்லரி கண்டமத் தாளந் தழங்க
முத்தார மாலைகண் மின்ன-அதில்
முப்புரி நூன்மலர் மாலைகண் மின்ன
மத்தாரந் திங்கள் திகழச்-சென்னி
வைத்தவன் புத்திர னென்று புகழ (வித்தார)
சீர்மது ரைப்பதி போற்றத்-தென்னன்
தீப்பிணி தன்னைவெண் ணீற்றினா லாற்றி
நீர்மிகை யேடெதி ரேற்றி-வந்து
நேர்சம ணர்களை வேரொடு மாற்றிப்
பார்மிசைச் சைவந் தழைக்க-வேறு
பல்சம யத்தவ ரெல்லா மிழக்கத்
தார்மணச் சோலைச்சீ காழி-வந்த
சம்பந்த மூர்த்திதன் சாயலைப் போலே (வித்தார)
18விடை✓
நிருதரை வீட்டுசங் காரன்-தன்னை
நினைத்தோ ருளத்தி னிறைந்தசிங் காரன்
குருமதி சூடுகங் காளன்-தந்த
குமரன்றெய் வானை குறத்திபங் காளன்
தருமலர் வானவர் பெய்யும்-கும்ப
சம்பவன் வந்து பதந்துதி செய்யும்
திருமலை முத்துக் குமார-சுவாமி
செங்கதிர் வேற்கரச் சேவக னம்மா!