முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்32 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்

54சிந்து✓
நிறைகின்ற கொல்லந் தொளாயிரத்
தைம்பதா மாண்டிற்-பண்பை
நீடூழி வாழ வருள்தர
வோங்கியெண் ணான்காம்
அறம்வளர்த் தம்மன் றிருநக
ரீசுரர்க் கன்பாய்ச்-செம்பொன்
அம்பலம் போலத் திருமுன்பு
மண்டப வாசல்
முறைமதிற் சுற்று திருக்கோயில்
தூவி சிகரம்-வாவி
முதலான கோடி திருப்பணி
செய்யமேன் மேலும்
துறவி சிவகுரு நாத
முனிக்கந்த நாளிற்-குறி
சொல்லிநான் பெற்ற மணித்தாழ்
வடமிது வம்மே.
பார்புகழ் கொல்லந் தொளாயிரத்
தைம்பத்தை யாண்டில்-நெல்லைப்
பதிமிசைச் சென்று குறிசொல்லப்
போனேனா னம்மே
சீர்தழைத் தோங்க மனுமுறை
யோங்கிய செங்கோல்-எங்கும்
செலுத்திய சாலிவா டீசுரச்
சாமியைக் கண்டேன்
ஏர்தரு காந்தி மதிநெல்லை
நாயகர்க் கன்பாய்-ஊர்தி
என்றிடு கிள்ளையும் பொற்கயி
லாசமுஞ் செய்ய
நேர்தரு மென்குறி கேட்டதற்
காயவன் றந்தான்-நல்ல
நித்தில மாலையுங் கொத்துச்
சரப்பளி யம்மே.
பொங்கிய கொல்லந் தொளாயிரத்
தைம்பத்தா றாண்டில்-மிக்க
பூபதி தென்கிளு வைப்பதி
வாழ்பதி நீதன்
துங்கன் பெரிய சுவாமி
யருளுஞ்சிங் கேறு-நல்ல
துரைமக ராசன் பெரியசு
வாமியைக் கண்டே
அங்கவன் சிந்தை நினைத்த
குறிமுற்றுஞ் சொன்னேன்-அதற்
காச்சரி யங்கொடு பூச்சரி
கைச்சேலை யொன்றும்
தங்கக் கடகமுந் தும்பிப்
பதக்கமு முத்து-மாலைத்
தாருங் கொடுத்துநெற் சேருங்
கொடுத்தன னம்மே.
மதுரை சிராப்பள்ளி காழி
சிதம்பர மாளுர்-கச்சி
மாநகர் காளத்தி யூர்கும்ப
கோணமை யாறு
முதுகிரி யண்ணா மலையொற்றி
யூர் திருப் புத்தூர்-சத்தி
முற்றந் திருவாலங் காடுவெண்
காடுசாய்க் காடு
பதிதிரி கூடந்தென் காசி
வடகாயி சேது-தமிழ்ப்
பாண்டி முதலிய வெண்ணெழு
தேசமுஞ் சென்று
புதுமைய தாய்க்குறி சொல்லி
விருதுகள் பெற்றேன்-அங்கம்
பூண்டிடுந் தங்கப் பணியா
பரணங்க ளம்மே.