முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறவன் குறத்தியைத் தேடுதல்48 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறவன் குறத்தியைத் தேடுதல்

83✓
காட்டுவா னொருவன் மேவிக்
காண்பவ னொருவன் பின்னும்
கூட்டுவான் சுகத்தை யென்றாற்
குறத்திதான் வந்தா லென்ன
போட்டியாற் போனா லென்ன
புலியனோ புலிதா னென்றே
தேட்டமாய்க் குறத்தி தன்னைக்
குறவனுந் தேடு வானே.
84சிந்து✓
தென்காசி வாசி வடகாசி தேசம்
சிவகாசி யூர்வஞ்சி தென்சேலத் தோடு
பொன்காசி மிஞ்சிய காஞ்சியுஞ் செஞ்சியும்
பூசுரர் கொச்சியும் வஞ்சியுந் தஞ்சையும்
மின்காவு சிங்களங் கொங்கண மீழம்
விளங்குந் தெலுங்க மராடங்கன் னாடம்
மன்காதல் கொண்டு விரைந்தோடித் தேடி
வளர்திரு மாமலைச் சாரல்வந் தானே.
85அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
இன்னமுந் தேடிக் காணேன்
என்னுயிர்க் குறத்தி தன்னைக்
கொன்னைவாய்ப் புலியா நீதான்
கண்டனை கூறு கென்றான்
தென்னுயர் சோலைப் பண்பைத்
திருமலை வழியிற் கண்டேன்
என்னவே குறவன் பின்னும்
மயங்கியே யியம்பு வானே.