முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
பாயிரம்1 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

பாயிரம்

காப்பு
1உச்சிக் கணபதி✓
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
சீர்சங்கு பண்பை யூர்வாழ் திருமலை முருக னீபத்
தார்சங்கு புயவேண் மீது தமிழ்க்குற வஞ்சி பாட
ஏர்சங்கு கமலம் பூத்த விறையவன் முதலோர் போற்றும்
கார்சங்கு மேனி யுச்சிக் கணபதி காப்ப தாமே.
2சுந்தரேசுவரர்✓
சந்திர வதனந் தன்னிற் றறுகயற் கண்ணி வேட்ட
சுந்தரே சுரன்பொற் பாதத் துணைக்கம லத்தை நித்தம்
சிந்தையா னினைந்து வாழ்த்தித் திருமலைக் குவட்டின் மீது
வந்தருள் கந்த வேண்மேற் குறவஞ்சி வழுத்த லுற்றாம்.
3திருமால் முதலியோர்✓
நிலவுவந் துலவுஞ் சோலை நிறைதிரு மலைமேல் வந்து
குலவிய குமரன் மீது குறவஞ்சித் தமிழைக் கூற
மலர்தரு திருவை வேட்ட மாலுநான் முகனு மேவும்
கலைவளர் மாது மென்பாற் கருணைதந் தருளு வாரே.
4நால்வரும் அகத்திய முனிவரும்✓
நற்றமிழ்க் காழி வேந்த னாவினுக் கரச னாரூர்ப்
புற்றிடங் கொண்டார் தோழன் வாதவூர்ப் புனித னல்ல
சொற்றமிழ் முனிவன் றங்க டுணைப்பதப் போதை வாழ்த்திக்
கொற்றவேற் குமரன் மீது குறவஞ்சி கூற லுற்றாம்.