முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்51 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்

90சிந்து✓
சொல்லாம லெங்கேநீ போனா யடிசொல்லு சிங்கி-காம
வல்லி தனக்குக் குறிசொல்லப் போனேனான் சிங்கா.
போனதின் மேனி யதிசயங் காணுதே சிங்கி-குண
மேன்மை மனிதரைக் கண்டால் வருமடா சிங்கா.
தலைதனிற் கொம்பு முளைத்த விருதேது சிங்கி-வஞ்சி
மலைமன்னர் தந்த மணிக்குப்பித் தொங்கல்காண் சிங்கா.
இந்து நுதலி லிரத்தப்பொட் டேதடி சிங்கி-அது
சிந்துர ரேகைத் திலதமென் பாரடா சிங்கா.
காதி லகத்திப் பழுப்பை நுழைப்பானேன் சிங்கி-தங்கச்
சோதி யிலகிய சொன்னப் பணியா சிங்கா.
மூக்கினின் மேலொரு மூக்குத் துளியெது சிங்கி-கோத்துத்
தூக்கிய வெண்முத்து மூக்குத் தளியடா சிங்கா.
வாயெலாம் ரத்த மயமா யிருப்பானேன் சிங்கி-பாக்குப்
போயிலை வெற்றிலை போட்ட சிவப்படா சிங்கா.
கண்டத்தில் நீர்ப்பாம்பு கட்டிக் கிடப்பானேன் சிங்கி-பூணும்
பண்டத்தில் மிக்கான பைம்பொற் சவடிகாண் சிங்கா.
செங்கை வளையத்துள் சில்லூர றொலிப்பானேன் சிங்கி-நல்ல
தங்கக் கடகச் சரியிட்ட வோசைதான் சிங்கா.
கொங்கைக் குவட்டினிற் குல்லா வணிவானேன் சிங்கி-பொது
மங்கையர் தந்த வனமுலைக் கச்சடா சிங்கா.
சங்கிலி யாலிரு காலிற் றளைத்ததார் சிங்கி-ராசைத்
துங்க மருதப்பன் சூட்டுஞ் சரமடா சிங்கா.
உன்னுடம் பெல்லா முளுப்போடி யேதுடி சிங்கி-மணந்
துன்னுங் களபந் துதைந்தாடு பூச்சடா சிங்கா.
இசங்கப் பழக்கோவை யிங்கே தரிப்பானேன் சிங்கி-அது
உசந்த விலைதரு மொண்டுமுத் தாரங்காண் சிங்கா.
மைக்குழை பூண்ட மருங்கு தெரியாமற் சிங்கி-நீதான்
கொக்கிற காலே குழல்கட்டிக் கொண்டாயே சிங்கி
கல்லார மாமலைக் கன்னியா தத்தையர் தந்த-இளஞ்
சல்லாவென்று சொல்லு முல்லாசாச் சேலைகாண் சிங்கா.
வசந்த னுறையு மலர்ச்சோலைச் சாரலடி சிங்கி-கெட்டி
நிசந்தா னுனக்கென் னெனக்கென்ன சொல்லடா சிங்கா.
பெரிய தனம்பெற்றுப் பேசா திருப்பானேன் சிங்கி-நடுத்
தெருவினிற் போட்டுத் தியாகங் கொடுப்பாரோ சிங்கா.
அரைப்பணந் தந்து துரைப்பெண்ணே நீவேலை கொண்டால்-பாரம்
பரைப்பணந் தந்துன்னைப் பாதம் வருடுவன் சிங்கி.
அணைத்துக் கிடக்கவு மாசை துடிக்குதே சிங்கி-நல்ல
கிணற்றுத் தண்ணீர் வெள்ளங் கொண்டோடிப் போகுமோ சிங்கா.
கம்பத்தி லேசிறு கும்பங் கவிழ்த்தடி சிங்கி-புதுக்
கும்பத்துக் கள்ளைக் குடித்துக் கவிழ்த்தடா சிங்கா.
தொண்டைக் கனியைச் சுவைக்கவா யுறுதே சிங்கி-கள்ளை
மண்டிய பின்வெறு வாயைச் சுவையடா சிங்கா.