முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறத்தி குறி கூறுதல்34 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறத்தி குறி கூறுதல்

56சிந்து✓
நினைத்தகுறிப் படியுள்ள
குறிசொல்லுவ னம்மே-என்முன்
நீவிட்ட பேரைக்குறி
யால் வெல்லுவன் அம்மே
கனத்தபல்லி சொன்னிமித்த
நன்றுகா ணம்மே-மிக்க
கருடகீர்த்த னஞ்செய்ததும்
வென்றிதா னம்மே
தனித்துநீ நின்ற வாருடம்
நன்றுதா னம்மே-கன்னி
தானிசைத்த வாய்ச்சொல்நன்மை
இன்றுகா ணம்மே
மனத்தினி னினைத்தகுறி
இன்றுகே ளம்மே-வைவேல்
வாலசுப் பிரமணி யனுனக்
குண்டுகா ணம்மே.
57அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
சென்னியோ ராறு முள்ளான்
திருவிழி யீரா றுள்ளான்
மின்னிய வேற்கை யாளன்
திருமலை வெற்பி னுள்ளான்
முன்னிய தேவர்க் கெல்லாம்
முதன்மையாய் வேந்த னாகக்
கன்னியே யுனக்கு நல்ல
கணவன்றான் வருவா னம்மே.
58சிந்து✓
மணமுடனே தரைமெழுகிக் கணபதிதான் வைப்பாய்
மாங்கனியும் தேங்கனியு மனமகிழப் படைப்பாய்
பணமுடனே யடைக்காயும் வெள்ளிலையும் வைப்பாய்
பாங்குடனே நிறைநாழி பூங்கொடியே வைப்பாய்
குணமாகப் பணிந்தேத்திக் கும்பிடுவா யுங்கள்
குலதெய்வங் களையெல்லாம் வேண்டுகொள்வா யம்மே
துணிவாக நினைத்தசெய்தி தேர்ந்து கொள்வா யம்மே
தோகைமயி லேகுறிநீ யோகையுடள் கேளே.
59அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
திருந்திய வடிவேற் கந்தன்
திருமலைக் குமர னாட்டில்
வருந்திரு வனைய பெண்ணே
வந்திடுந் திசையு நன்றே
இருந்திடு தலமும் வாய்ப்பும்
இயம்பிய மொழியின் மேன்மை
பொருந்திய குறிநா னன்றாய்ப்
புகலுவேன் புகலு வேனே.
60சிந்து✓
செங்கமலக் கைகாட்டாய் திங்கண்முகப் பொன்னே
தேனமிர்தம் பாலமிர்தம் பழகுமிந்தக் கையே
தங்கநவ மணிகண்மிகக் கொடுக்குமிந்தக் கையே
தானதன்ம மேன்மைபெறச் செய்யுமிந்தக் கையே
துங்கவடி வேலர் தமக் கேற்குமிந்தக் கையே
சோபனகல் யாணமலர் சூட்டுமிந்தக் கையே.
61அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
மங்கையே யுனது செந்தா
மரைக்கரம் பார்க்கி னிந்தச்
செங்கைதான் பிடித்தோர் மிக்க
தேவர்க்குந் தேவ ராவார்
இங்கிது பொய்யா தென்றே
எழிற்றிரு மலையில் வாழ்ந்த
துங்கவேற் கடவு ளாரை
வணங்கியே துதிசெய் வாளே.
62நிலைமண்டில வாசிரியப்பா✓
முச்சகம் புகழு முச்சி விநாயகர்
கொன்றையி னிழல்வாழ் வென்றி விநாயகா
மருமலர்க் குவளைத் திருமலைக் குமரா
வாவிமேல் கரையின் மேவுகன் னியரே
அருமறை போற்றுந் திருமலைக் காளி
கொடுவினை தீர்க்கும் வடுக நாதா
கருமணி கண்டனார் தருமணி கண்டா
ஆதிநா யகனே பூதநா யகனே
கடும்படை தரித்த விடும்பு சுவாமி
மாடனே கமல வல்லிநா யகியே
வேடனே விரும்பும் வேடிச்சி யம்மே
வன்னிய ராயா முன்னடி முருகா
பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா
உவப்பான கானடா சிவப்பாறை முண்டா
மாலைவார் குழல்சேர் கால விசக்கியே
வருதுட்ட ராயா பொருபட்ட ராயா
படைக்கலஞ் சேர்த்த வடைக்கலங் காத்த
ஐயனே கருணை மெய்யனே சரணம்
கனதனம் பூத்த காம வல்லியார்
மனதினி னினைத்தது மன்னியுயிர்ச் சீவனோ
நவமணித் திரளோ நானிலப் பொருளோ
கவனன்செய் மயக்கோ காலத்தி னியல்போ
மாடகு டங்களோ வரத்தொடு செலவோ
ஊடலாய் மன்ன ருடனுறுஞ் செயலோ
வேந்தர்தா மிவன்மேற் விரும்பிமால் சொன்னதோ
போந்தமன் னவர்மேற் பொருந்திய மயலோ
துகிலொடு வளையுஞ் சோர்ந்திடு மயக்கோ
மகிழ்வுடன் மணமும் வரும்பெருங் குறியோ
தொகைசொலுங் குறிக்குள் வகையிது வென்ன
இங்கிவ ணினைத்த வியற்குறி தன்னை
மங்கள மாக வகுத்தருள் வீரே.
63அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
தேசமெண் ணேழும் போற்றும்
திருமலைக் குமர நாதன்
நேசமா யிருக்கு தம்மே
நினைத்திடுங் கறுப்பன் வந்து
மூசுமு சென்றே யென்னுள்
முன்னியே யுன்னி வந்து
பேசுது குறிதா னம்மே
பேசுவேன் குறியைக் கேளே.