முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்35 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்

64சிந்து✓
சோலைமலை வீதியினீ நின்றுதா னம்மே-நல்ல
தோழியுடன் பந்தடித்த வேளைதா னம்மே
கோலமயில் வீரன்வரக் கண்டுதா னம்மே-சேனைக்
கூட்டங்கண்ட வெருட்சிபோலக் கண்டதே யம்மே.
கூட்டங்கண்ட வெருட்சியென்றாற் குறத்தி மாதே-மயல்
கொண்டகுளிர் காச்சலுண்டோ நின்று பாராய்
வாட்டமின்றிப் பூங்குழலே சொல்லக் கேளாய்-திரு
மாமயிலி லேறிவந்த வேலனைக் கண்டே.
நாட்டமெல்லா மவன்மேலே வைத்த மோகம்-மிக
நாடுமயல் காச்சலென்று காணுதே யம்மே
கேட்டசெய்திக் காகவொன்றைச் சொல்லலாமோ என்னைக்
கேலிசெய்ய லென்றுசொல்லி வெல்ல லாமோ.
சொன்னகுறி நிசந்தானோ வின்னம் பாரு-நல்ல
தோகையர்க்கெல் லாமரசே யின்னம் பாரு
பொன்னனைய காமரச வல்லி மாதே-குறி
பொய்யலவே நீமயங்கிச் சொல்கிறா யென்றாள்.
அன்னவன்பே ரென்னவென்று பன்னுவா யென்றாள்-பேர்
ஆயிரம்பே ரானதனி லொன்று கேளாய்
வன்னமயிற் காரனவன் பண்பை யூர்வாழ்-திரு
மாமலையில் வாழுங்கந்த சுவாமிதா னென்றாள்.
என்று சொன்ன குறிநிசத்தைக் கண்டுதான் முன்னே-வந்
திருந்தகாம வல்லிநாணங் கொண்டு கவிழ்ந்தாள்
வென்றிவடி வேலருன்னை வந்து சேரும்-நாளை
வெட்கமெல்லா மோடியொரு பக்கம் போமே.
மன்றல்செறி பூங்கடப்ப மாலைதா னம்மே-தோழி
மாதுகொண்டு நொடியில்வரும் வென்றிதா னம்மே
நன்றிதென்று காமவல்லி திருமலைக் கந்த
நாதன்ரு ளியகடப்ப மாலை வாங்கினாள்.