முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறத்தி வருகை23 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறத்தி வருகை

40கட்டளைக் கலித்துறை✓
கனத்திற் சிறந்த குழற்காம வல்லிதண் காவின்மிசை
இனத்தைப் பிரிந்திடு மான்போன் மயங்கிய வேல்வைதன்னில்
அனத்திற் சிறந்த நடைகாட்டி மாமயி லாமெனவே
வனத்திற் சிறந்த குறத்திமின் னாளங்கண் வந்தனளே.
41நிலைமண்டில வாசிரியப்பா✓
தண்கதிர் விரித்த வெண்கயி லாய
வெற்பினி லுதித்த பொற்புறு நீலம்
முகிழ்தரு காவி திகழ்திரு மலையான்
மாமணித் திரளும் வன்புலிப் பறழும்
தேமலர்த் தளிருந் தெண்டிரைக் கரத்தால்
வானிரு நிதிபோல் மகிழ்ந்திட வுதவி
நானிலம் புரக்கு நன்னதி யாளன்
பொன்னிறத் திரவும் பூந்துணர்ந் தருவும்
மன்னிநின் றோங்கு வடவாரிய நாட்டான்
ஆடல்வண் டொலிக்கு மண்டர்க டுதிக்கும்
பாடல்வண் டிசைக்கும் பண்பைமா நகரான்
சூர்கிளை நெஞ்சந் துணுக்குற வானோர்
சீர்பெறத் தோன்றுஞ் சிகண்டிவெம் பரியான்
வெண்மதி மருப்பு விளங்கிட முகில்போற்
தண்மத மழைநீர்த் தாரைகள் பெய்யும்
வரையென வோங்கி வளர்ந்தவா ரணத்தான்
விரைதரு கடப்ப மென்மலர் மாலையான்
வான்வரை யுயர்த்த வாரணக் கொடியான்
மேன்மைமும் முரசும் விளங்கிய வாசலான்
அண்டம்யா வையினு மாருயிர் தோறும்
கொண்டிரு நிழல்போற் குலவிய வாணையான்
அன்பர்தம் முள்ளத் தின்புறு பெருமான்
அடியனைக் காக்கும் வடிவுயிற் குமரன்
வண்புகழ் பாடி வெண்பொடி பூசி
வெஞ்சர விழிமீ தஞ்சனந் தீட்டிக்
குன்றென வளர்ந்த கொங்கையின் மீதில்
ஒன்றிய பாசியுங் குன்றியும் புனைந்து
பட்டுடை மருங்கி லொட்டிய கூடையும்
மாத்திரைக் குறிதெரி வேத்திரக் கோலும்
வேல்விழி நயப்பும் பான்மொழி வியப்பும்
மேனகை யுருவசி மான்விழி யரம்பை
துதிசெயத் திடமா யதிசயத் துடனே
மால்கொளு மடவார் மனத்துய ரடங்க
மேலணி யுடுக்கும் விளங்கிடத் தொனித்தே
உலகெலாந் துதிக்குந் திலகமா யிலகி
மாதர்க ணினைத்த மனக்குறி மூன்று
போதினும் வருங்குறி போங்குறி மெய்க்குறி
வேந்தர்கள் கைக்குறி விரும்பினோர் மொழிக்குறி
பாந்தமாய் வகையாய்ப் பகர்ந்திடுங் குறியே
திறத்துடன் சொல்லுங் குறத்திவந் தனளே.
பல்லவி✓
குறத்தி வந்தனளே-திருமலைக்
குறத்தி வந்தனளே (குறத்தி)
அநுபல்லவி✓
மறத்தி யின்சொலை யுறுத்தி மஞ்சுறு
நிறத்தி வஞ்சியர் திறத்தை மிஞ்சிய (குறத்தி)
42சரணங்கள்✓
அல்லை நேர்குழல் கெண்டை போல்விழி
முல்லை வாணகை தொண்டை வாயிதழ்
வில்லை நேர்நுதல் கண்டு போன்மொழி
செல்வி போலெழில் கொண்டு மேவிய (குறத்தி)
✓
தங்க மலைநிகர் கொங்கை யணிபணி
தங்கி யொளிகள் விளங்கவே
செங்க ணடுகுழை திங்க ளொளிநிகர்
செங்கை யணிவளை முழங்கவே
அங்க மிலகிய சிங்க நிகரிடை
அங்க ணணிதுகில் துலங்கவே
தொங்க லணிகுழன் மங்குல் செறிதரு
துங்க விரதி மயங்கவே. (குறத்தி)
43கொச்சகக் கலிப்பா✓
சித்தர்பணிந் தேத்தவருஞ் செவ்வேள் குவளைவெற்பிற்
கொத்தலருங் கூந்தற் குறத்திமதி யானனத்தில்
முத்தை நிகர்த்த முகிழ்ப்பவள வாயிசைதான்
புத்தமுதோ தேனோ புகலவரி தென்றாரே.
பல்லவி✓
குறிசொல்ல வந்தாளே-குறத்தி
குறிசொல்ல வந்தாளே (குறி)
44சரணங்கள்✓
உறுகாம வல்லி பெறுகாம நோயால்
மறுகாமல் மாலை கருகாமல் மேவக் (குறி)
கிஞ்சுக மலர்வா யஞ்சுக மொழியாள்
நெஞ்சுறு மயற்கே சஞ்சீவி போலக் (குறி)
வருவிட விழியா ளிருகுட முலையாள்
பெருகிய மயல்தீர் முருகனை மேவக் (குறி)