முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குளுவன் கூற்று49 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குளுவன் கூற்று

பல்லவி✓
தேடியுங் காணேனே-குறத்தியைத்
தேடியுங் காணேனே.
சரணங்கள்✓
தேடியு செல்வப் பசுங்கொடி வஞ்சியைத்
தேனைத் திருமலை யானைத் தினந்தினம்
பாடிய செங்கனி வாய்க்குயிற் பேடையைப்
பைங்கிளி வண்ணக் குறப்பெண்ணை நாடிநான்(தேடி)
கிஞ்சுக வாயித ழுஞ்சுக வாய்மொழிக்
கீற்றிள மாமதி தோற்றிய வல்லியைக்
கஞ்சுக வார்முலை யின்சுகக் காரியைக்
காம ரசந்தரு காமியைக் காமித்துத் (தேடி)
மெய்ப்பணச் சோலையுள் மைப்பணங் கொண்டு
விரித்திடும் பாம்பு கடித்திடு மென்றிரு
கைப்பணங் கொண்டவள் காலிற் சொரிந்துமெய்
கட்டிக்கொண் டேனெனை முத்திக்கொண் டாளெநான்(தேடி)
மலையானைக் கண்டு மலையாம லெஞ்சு
மயங்காம லென்று பயந்தீர வென்று
முலையானை யென்கை வசப்படத் தந்தொரு
முத்தங் கொடுத்திடு புத்தமு தத்தைநான் (தேடி)
மைக்குழ லோசையும் புட்குர லோசையும்
வால்வளை யோசையும் மேகலை யோசையும்
மெய்க்கழ லோசையு மேலிட லீலை
விதத்தொழில் செய்யு மதக்குயி றன்னைநான் (தேடி)
தாரேறு கூந்தல் சரிந்தாடு மோகம்
தழைத்தாடு வேல்விழி தான்களி கொண்டாடப்
போரேறு போலெதிர் தேறி விளையாடும்
போகத்தைத் தந்திடு மோகக் குறத்தியைத் (தேடி)
87தரவு கொச்சகக் கலிப்பா✓
சங்கமங்க டாவரங்க டாபரமாய்க் கொண்டிலகும்
துங்கமுரு கேசன் சுனைக்குவளை நீல வெற்பில்
வங்கணனைப் பார்த்து மலைக்குறவ னென்னுடைய
சிங்கிதனைக் காட்டினையேற் செய்வன்வெகு மானமென்றான்.
88சிந்து✓
சொக்குப் பொடியுங் குளிசையுங் கூடத் தருவேன்-என்
தோகையி னைக்குறு மாதினைக் காட்டிய பேர்க்கே.
சர்க்கரை மந்திர் தந்திரஞ் செய்து கொடுப்பேன்-என்
சல்லாபக் காரியைக் காட்டிய பேருக்குத் தானே.
கைக்கனி போலவு மந்திர சாலமுஞ் செய்வேன்-இரு
கண்ணானங் குறத்தியைக் காட்டிய பேருக்கு முன்னே.
அக்ரம மாகவே குக்கிட்டி மந்திரஞ் சொன்னாற்-கூத்
தாடிச் சிலம்பம் படவெட்டுக் காகுமோ முன்னாய்.