முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
முருகக்கடவுள் பவனி வருதல்4 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

முருகக்கடவுள் பவனி வருதல்

9எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்✓
பூவனிதை தனக்கழார் வதன மான
புண்டரிகப் போதனைய பண்பை மீதே
மேவுபொகுட் டனையதிரு மலையின் மேலே
விளங்கியமுத் தெனச்சிறந்த வேற்கை நாதன்
தாவுமயி றனிலேறி யனந்த கோடி
சரற்கால சந்திரன்போற் றழைத்துத் தோன்றித்
தேவர்கண முடுக்கணம்போற் சேனை சூழத்
திருவுலாப் பவனிவந்து சிறக்கின் றானே.
சிந்து (பல்லவி)✓
மயிலில் வந்தனனே-திருமலைக்குமரன்
மயிலில் வந்தனனே. (மயிலில்)
அநுபல்லவி✓
செயமிகுந்திடு மயில்விளங்கிய தினகர்பலர் நிகரவே
புயமிலங்கிய குரவலங்கல்வெண் பொடியலங்குருத மிலகவே (மயிலில்)
10சரணங்கள்✓
வித்தியாதரர் கருடர்கின்னரர்
வீணையின்னிசை முழங்கவே
சிந்தர்யோகியர் திக்குபாலர்கள்
செயசெயென்றொலி முழங்கவே
முத்தமிழ்த்திருப் புகழிசைத்திட
மூவர்பாடல்கள் விளங்கவே
மத்தளந்தவில் பேரிசல்லரி
மங்கலத்தொலி தழங்கவே (மயிலில்)
பவளமொய்த்தவெண் முத்துக்குடைகளும்
பாங்கரெங்கணும் பிடிக்கவே
கவளயானையின் வாசியின்னொலிசுலாய்க்
ககனவண்டமும் வெடிக்கவே
தவளவாணகை வானரம்பையர்
தாதத்தாவென நடிக்கவே
கவலைகூர்ந்துவெஞ் சூரர்தங்கிளை
கலங்கியேநெஞ்சு துடிக்கவே (மயிலில்)