முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குளுவன் கூற்று42 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குளுவன் கூற்று

74தரவு கொச்சகக் கலிப்பா✓
சேலுலவும் பண்ணைவயல் செந்நெனிறை பண்பையில்வாழ்
கோலவடி வேற்கைக் குமரள்வளர் காவிவெற்பில்
வாலமதி போல வளைந்தநெற்றி மாதர்முலை
மேலணியுங் கச்சாய் விதிவிதித்தா னில்லையே.
பல்லவி✓
கண்ணி கொண்டு வாடா புலியா-குருக்குக்குக்
கண்ணி கொண்டு வாடா
75சரணங்கள்✓
கண்ணன் கருடனைக் கொண்டோடி னான்குகன்
கைக்கோழி கொண்டொரு மெய்த்தோகை யேறியும்
நண்ணிய கொக்கை யவித்துக்கொண் டான்பின்
நமக்கென்ன குற்றஞ் சுருக்கென வோடியே (கண்ணி)
அந்நாளில் நம்முடைக் கண்ணப்பன் காலடி
யான்மிதி பட்டு மருந்திய வூனுக்குப்
பின்னாசை வைத்ததை யருந்தும் பெரிய
பிரான்செய்தி மன்மதன் பேராசை கொண்டே
எந்நாளுங் கையினின் மீனைப் பிடித்தனன்
இரணியன் சொன்ன புலியைப் பிடித்தனன்
உன்னத பேர்களு முன்னுவர் நாந்தின்னும்
ஊன்கறி வேட்டைக்குத் தான்குறி கொண்டனர்(கண்ணி)