முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
தூது செல்ல வேண்டுதல்20 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

தூது செல்ல வேண்டுதல்

32அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
என்றிவை பலவுங் கூறி யென்பொருட் டாக மின்னே
சென்றுநீ தூது சொல்லித் திருமலை முருகன் மார்பில்
ஒன்றிய கடப்ப மாலை யுண்மையா வாங்கி யென்பால்
வென்றியாய் வருதல் வேண்டு மென்குலக் கொடிமின் னாளே.
பல்லவி✓
தூதுசொல் லடியோ மானே-விரைவினிற்போய்த்
தூது சொல்லடியோ மானே (தூது)
அநுபல்லவி✓
பூதலம் பரவு பண்பை மீதுகந்த நாதன்முன்னே (தூது)
33சரணங்கள்✓
அத்தநா ரீசர்தரு புத்ரன்வடி வேலனொரு
சித்ரமயில் மீதில்வரு முத்தையன் முனமேசென்று (தூது)
இந்த்ரன்முடி சூடவர விந்தன்முத லோர்பரவ
வந்தருள்செய் வேலனெழிற் கந்தன் முனமேசென்று (தூது)
பாவினஞ் சிறந்திலகு சேவலங் கொடிமருவு
காவியங் கிரியின்மிசை மேவுகந்த நாதன்முன்னே(தூது)
34அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
மறுசமய மானசமண் வஞ்சமய வாதிகளை
மறுத்தீ ராறு
பெறுசமய மீதினிலே புறச்சமய மாறகற்றிப்
பேச மேலாம்
அறுசமய மானவற்று ளருட்சமயஞ் சைவமென்றே
அருள்செய் வேலன்
உறுசமயம் பார்த்துமிக்கா யொருசமயஞ் சொல்லுவன்கேள்
உற்று மானே.
35சிந்து✓
தேவர்பணி காவிமலை முருகனுக்குப் பூசை
தினமாறு காலமதி லபிடேகம் நாலு
ஆவலுட னைப்பசியுந் தைமாதந் தனிலும்
அவனிதொழுந் திருவுலாப் பவனிபெருங் கூட்டம்
மேவியவை காசி விசாகநாள் தன்னில்
மிக்காக வபிடேக விழாச்சிறப்பு மயிலே
பாவலரும் பூவையரும் பாடலுட னாடலிரு
பாலிலகுஞ் சாயரட்சை கொலுப்பார்க்கும் பொதுக்காண்.
36✓
ஆகமத்தின் மிக்கான காரணத்தின் படியே
அருச்சனைசெய் சங்கரநா ராயணவே தியனும்
மேகநிகர் காதலன்சொ லாதிசுப்பிர மணியன்
மேன்மைபெறு விக்கிரம பாண்டியவே தியனும்
பாகமதில் நின்றுதீ பாராதனை செய்வார்
பகரவுங் கூடாது காலசந்தி புரிந்தே
ஏகமெனத் தனித்திருக்கும் வேளையிற்று தூரைத்தே
எழிற்கடப்ப மாலைதனை வாங்கிவா சகியே.