முருகன் App
திருமலையாண்டவர் குரவஞ்சி
குறத்தி நாட்டுவளம் கூறுதல்27 / 51
1பாயிரம்2அவையடக்கம்3கட்டியக்காரன் வருகை4முருகக்கடவுள் பவனி வருதல்5தரிசித்த மாதர்நிலை6காமவல்லி வருதல்7காமவல்லி வருணனை8காமவல்லியின் வருகை9காமவல்லி முருகக்கடவுளைத் தரிசித்தல்10காமவல்லி வினாவுதலும் தோழியர் விடை யிறுத்தலும்11காமவல்லி மயல்கொள்ளுதல்12காமவல்லி இரங்கல்13காமல்லி தென்றலை நோக்கிக் கூறுதல்14சந்திரனை நோக்கிக் கூறுதல்15மன்மதோபாலம்பனம்16தோழிமார் வினவுதலும் காமவல்லி விடை கூறுதலும்17தோழி கூற்று18காமவல்லி கூற்று19முருகவேள் பெருமை20தூது செல்ல வேண்டுதல்21காமவல்லி கூடற்சுழி பார்த்தல்22இரங்கல்23குறத்தி வருகை24காமவல்லி குறத்தியை வினாவுதல்25குறத்தி மலைவளம் கூறுதல்26காமவல்லி நாட்டுவளம் வினாவுதல்27குறத்தி நாட்டுவளம் கூறுதல்28தல மகிமை29காமவல்லி முருகவேள் குலத்தை வினாவுதல்30குறத்தி கூறுதல்31காமவல்லி வினாவுதல்32குறத்தி தான் பெற்ற பரிசுகை கூறல்33காமவல்லி கூறுதல்34குறத்தி குறி கூறுதல்35குறத்தியும் காமவல்லியும் பேசிக்கொள்ளுதல்36காமவல்லி திருமலையாண்டவன் மாலையைப் பெறுதல்37குளுவன் வருதல்38உடன்வந்தோர்39குளுவனுடைய ஏவலர் கூற்று40குளுவன் கூற்று41ஏவலர் கூற்று42குளுவன் கூற்று43புலியன் கண்ணி கொண்டு வருதல்44புலியன் கூற்று45புலியன் பதுங்குதல்46புலியன் கூற்று47குறவன் கூற்று48குறவன் குறத்தியைத் தேடுதல்49குளுவன் கூற்று50குறவன் சிங்கியைக் காணுதல்51சிங்கனும் சிங்கியும் உரையாடுதல்
திருமலையாண்டவர் குரவஞ்சி

குறத்தி நாட்டுவளம் கூறுதல்

48சிந்து✓
மூண்ட காசனி வெண்ணிறக் கொண்டல்
முந்நீ ருண்டுமை மாலென மீண்டு
கொண்ட பொன்மகண் மார்பினன் மின்னைக்
குலாவு சங்க முழக்கிடி யென்னப்
பண்டு தான்சிவ பூசனை செய்யும்
பான்மை யென்னப் பருப்பதஞ் சார்ந்து
மண்ட லீசுரர் கொண்டாட வானம்
வழங்கு வாரிவட வாரிய நாடே.
பாரதி நிறச் சொல்லைவி தைத்துநற்
பார்ம டந்தை யிடத்தங் குரித்தெழ
ஏர்த ருஞ்செல்வி போல வெள்ளிமின்ன
இமய மாதென நெல்வளர்ந் தோங்குறச்
சீர்த ழைத்திட முப்பத் திரண்டறம்
செய்து மேன்மை சிறந்திடுஞ் செய்ந்நல
மாரி யோங்க விளைந்திடு சாலியை
வழங்கு மெங்கள் வடவாரிய நாடே.
செய்யிற் பூத்த கமலங்கை யென்னச்
செழுங்கு முதங்கள் வாய்விண்டு சொல்ல
மெய்யெ னாவிழி நீலங்கள் காட்ட
விளைந்த சாலிகள் முத்தஞ் சொரியத்
துய்ய வால்வளை யெங்கு முழங்கவெண்
தூவி யன்னங்க ளாடல் விளங்க
வைய மேழும் புகழ்ந்திடு கீர்த்தி
வழங்கு மெங்கள்வட வாரிய நாடே.
செந்நெல் கன்ன லெனவளர்ந் தேறச்
சிறந்த கன்னல் கமுகொத்து மீறத்
துன்னு பூகங்கள் வானைத் துளைக்கச்
சுவர்க்கத் தோர்பயங் கொண்டு திளைக்கச்
சின்ன மாங்குயில் வாய்விண்டு கூவச்
சிலீமு கம்மலர்த் தேன்கொம்பிற் றாவ
மன்னு சோலைக் குழாஞ்சிறந் தோங்கி
வழங்கு மேன்மைவட வாரிய நாடே.
கருப்பு வில்லி கொடிவெடி யுந்தக்
கமுகிற் பூத்த பழத்தினைச் சிந்த
பருத்த வாழைப் பழத்திற் புடைத்துப்
பலாவிற் றூங்கும் பழத்தை யுடைத்துத்
திருத்து தேறல் புறவினிற் பாய்ந்து
செழிக்க நாரை சுனைக்கயன் மாந்த
மருத்து றைபொழி லெங்கு நெருங்கி
வளரு மேன்மைவட வாரிய நாடே.
காவின் முக்கனி யைக்கரு மந்தி
களிப்ப வானரங் கையிற் கொடுக்கப்
பூவை யேழிசை கொண்டு படிக்கப்
புளின மீது சிகண்டி நடிக்க
மேவு சங்கொலி வான மிடிக்க
மடைந்த சோலை மலர்கள் வெடிக்க
வாவி மாதர் மலர்ப்பந் தடிக்க
வழங்கு மெங்கள்வட வாரிய நாடே.
49அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்✓
பெருநாட்டி யுஞ்சிறந்த பெம்மான்றன் னிடத்தமர்ந்த
பிராட்டி யீன்றோன்
தருநாட்டி யும்பர்கிளை தனைநாட்டிப் பன்னிரண்டு
சலசம் பூத்த
திருநாட்டம் படைத்தகந்தன் றிருநாட்டின் சிறப்புரைக்கத்
தெவிட்டா தம்மே
மருநாட்டு மலர்க்குவளைச் சுனைத்தீர்த்தந் தலமகிமை
வகுக்கக் கேளே.