முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
காப்பு1 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

காப்பு

1விநாயகர் காப்பு வெண்பா✓
சீர்மணக்குந் தென்மயில வெற்பிற் றிருமுருகன்
பேர்மணக்கும் பாட்டிற் பிழையகல - ஓர்மணக்கு
ளத்தனப்பன் நற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்பன்
எத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.
2விநாயகர் துதி✓
வண்ணம்
இராகம்: நாட்டை தாளம்: ரூபகம்
உல குதி னமு னெழில் மல ரடி
உள மதி னினை குவ தெனி லவர்
உறு வினை எவை களு மிலை யென இனிதாமால்
உமை யவள் தரு முதன் மக னுனை
உள மொழி மெய்க ளினி லடி யவன்
உவ கையொ டுதொ ழுகு வதை யினி மறவேனே
மலி யவல் பொரி யொடு பய றுகள்
மது நிகர் கனி வகை யனு தினம்
வரை யென நிறை யவு னது திரு வடிவேலே
மன மகி ழஇ டுவ னருள் ககு
மர னழ ஒரு கனி யைய ரனை
வல மிடு வதி லுணு மரி மகிழ் மருகோனே
மலை மத கரி இடர் புரி யுமொர்
மதி யிலி அசு ரனை ஒரு நொடி
மடி யவ மரர் துயர் களை யுமொர் அடல்வீரா
வரு புதை யலி னிதி யென மலை
வழி யரு வியெ னவெ னது கவி
வள மொடு புதி யன வென விரி புவிமேலே
பொலி தர அவை புகழ் பெற மிகு
புல வரே வரு மினி தென நனி
புவி யினர் உள மதி லொளி தர அருள்வாயே
புரை தவிர் தெரு வரி செயொ டமர்
புனி தமொ ழிய ரிவை யர்க ளுறை
புது வையி லமர் கய முக முறு பெருமாளே
3சிவபெருமான் துதி✓
வண்ணம்
இராகம்: தேசிகம் தாளம்: ஆதி
நதியொடும் பிறையணிந் திடுபரம் பொருளெனுஞ்
சிவனைவந் தனைபுரிந் தாலே - உயர்
நலமரு விடுநிறை கலைகுடிபுகருவம் அறிவுபெருகிவிடும் உலகுபுகழ்பரவும்
ஆருமெச்சு வார்பகைவர்
பேர்நினைத்தி டார்நிதிகு
பேரனுக்கு மேல்நிறையும்
வாழ்வளிக்கு மேமனித
ரேயுமக்கெ லாமளிக்க வேவிருப்ப மாயிருக்கி றானிருக்கு
மாலையத்தி லேமிதித்த காலடிக்கு நேரிலுற்று வாழ்வளிக்க
வேணுமப்ப னேயெனச்சொ னால்நொடிக்கு ளேயளிப்பன்
இப்புவிக்கு மெப்புவிக்கும் எப்பொருட்கு மப்பன்வித்து
தோலுடையா னாடரவே தானணிவான் மாமுடிமேல்(ந)
உலகமுஞ் சடவுடம் பெவைகளுங் கணமறைந்
தழிவுறுஞ் சிறிதும்நம் பாதீர்—தொகை
நகையுடை பொருள்நிலம், மனைமகளுறவினர், பரி கரிமுதலிவை களிலொரு பயனிலை
காலன்விட்ட பாசமதை
நேர்விலக்கு மோஇவைகள்
போமுயிர்க்கு வீதிவரை
தான்வரச்சொ னால்வருவ
தேதுசற்று நீரிழைத்த ஓர்அறந்தொ டேபெருத்த பாவமொக்க
வேவழிக்கு நாடிநிற்ப தாலதற்கு ளேயெனப்ப னாணைசற்று
மேமறுத்தி டாதுநற்ற போதனர்க்கு நேசம்வைத்து
நித்த நித்த மெய்த்த வத்தொ டுற்றபத்தி பெற்றிருப்பீர்
ஈதலவோ மானிடரே பூதலமே லாதரவே (ந)
அமரர்தம் பகைகெடும் திரிபுரம் பொரிபடும்
பரமனம் பகம்விரிந் தாலே - நிறை
அருளினி லுலகமு நிலைபெறு வனமறை
முடிவினில்நடமிடு பொருளென அறைகுவர்
ஆசைவிட்டு நாடுமன
தோரிடத்தி லேவிடுத
போதனர்க்கு மாமுனிவர்
ஆனவர்க்கு மாமலரி
லேயிருக்கும் வேதனுக்கும் மாயனுக்கு மேகிடக்கி லாதவஸ்து
மாமலைக்கு ளேமுளைத்த ஓர்கொடிக்கு நேயவஸ்து மாபுவிக்கு
தாரவஸ்து யாவினுக்கு மூலவஸ்து தேனையொத்த
சுப்பு ரத்தி னத்தி னற்ப தத்தி னுக்கி னித்த வஸ்து
வாதலிணீ ரேபுவிமேலீ துணர்வீர் வாழ்குவிரே
4உமை துதி✓
வண்ணம்
இராகம்: தேசிகம் தாளம்: ஏகம்
வாய் திறந்தழு மோர் குழந்தையின்
மேலிரங்கிடு வாய் தினம் படு
வாதை கொஞ்சம் தோமுனஞ் சிறு
பாலனங்கழ வேகறந்தழு
தேதருங்கரு ணாலையந் தனி
லேவணங்கிடு பேதையுங்கடு
காக்கிலும்பெற வேறினைந்தனன் யாதையுங்கரு தாமலின்றெனை
ஆளலுனது பாதமலது வேறுகதியு லோக மதனில்
ஏதுபுவன நாயகியுமை பார்வதியுப காரிய மலி
அட்டதிக்குவிண் யாவுமீன்ற அன்னை காமாக்ஷியே,
பேயெனும்படி தாரணிந்தெழி
லாய் நடந்திடு தோளொடுங் கனி
வாயொடுந் தளிர் மேனியெங்குமொ
ரேமணந்தர வாரிடுங் குழல்
காரெனும்ப்படி மார்பில் வெண்துகில்
ஊரறிந்திட் வேதிறந்தெனை
மாதெனும்பெறு மேதி வந்தினி
மேலும் வஞ்சனை யால் நெருங்குமுன்
வாசிவபெரு மானிடையினி லேபடர்கொடி யேஇமமலை
மாதவமணி சோதனைபுரி யாதுனதிரு மாமலரடி
மற்றுவப்புடன் ஈதல் வேண்டும் வல்லி காமாக்ஷியே,
சாதியுஞ்சம யாதியுந்தணி
யாதசண்டையி லேமுயன்றன
நீதியுங்கிடையா தறங்கிடை
யாதினம்பரி காசமும்பட
வே பணந்தனை யே நினைந்ததி
காரமும்பெற நீசதந்திர
மே புரிந்திடு மானிடந்தனி
லேகிடத்தலை யாது வந்தெனை
யாவருமொரு சோதரரென மாசமாச ஞானமுதய
மாகிடும்வண மேமிகுசிற னாயறுதின மேயினிமையின்
மெய்க்குழைத்திடும் வீரமாண்பு செய்ய மீனாக்ஷியே.
நோய்களும்பல கோடியுண்டதி
னால் வருந்திடு போதுவந்தவு
ஷாதிதந்துமோர் சோதிடன் குண
மாகுமென்றதி லே பணங்குறை
யாது தந்தொரு நாள் கடந்தபின்
ஓலை வந்தது மேலிருந் தென
ஓடி வந்தெம தூதருந் தம
தூர் வரும்படி கூவு முன்பெனை
ஆதரிமுன மோர்நொடியினி லேய சுரரின் வேரழிவுற
வேயெழில்மயில் வாகனனிடம் வேலுதவிய தாய்நிருமலி
சுப்புரத்தினம் நாளும் வேண்டும் அம்மை மீனாக்ஷியே.
5திருமால் துதி✓
வண்ணம்
இராகம்:சகானா தாளம்:ஆதி
பாலாழி மேலினிது கண்துயிலும் மாதவனே
மாலேயுன் மார்பிலணி வண்டுளப மாலையிலே
வந்து மொய்த்தி டுஞ்சி றைப்பொன் வண்டினுக்கி ருந்த மெய்த்த
வந்தனிற்று ரும்பிடைக்கி சைந்தெனக்கி டும்படிக்கு
மட்டினிக்கு மெய்ப்பதத்தி னைத்துதித்தி ளைத்து நிற்கும் மகன்மேலே
மூலாவி லாசவிழி யின்கடையி னாலெனையே
ஏலாதெ னாதருள்க மங்களகு ணாலையனே
எண்டிசைக்கு ளங்கணுற்ற உம்பருக்கு ளெங்கெனக்குன்
அம்புயப்ப தந்தனக்கி ணைந்த நற்சு கங்கிடைக்கும்
இச்சகத்தி னைக்களிப்பி னிற்படைத்த ளித்தழிக்கும் எழிலோனே!
மேனாளிலே முதலை தின்றிடுமு னேயரியே
கோனேயு னாதரவு தந்தருளு வாயெனுமோர்
குன்றையொத்த வெஞ்சினப்பெ ருங்கரிக்கி ரங்கியக்கண்
அந்தரத்தி ருந்துவப்பொ டும்புவிக்கு வந்தடுத்த
ரைக்கணத்தி லக்கரிக்கு மெய்ப்பதத்தி னைக்கொடுத்த அருளாளா!
தேனாறு பாய்குவது கண்டுகுகி னேனதையே
நானார வேயுணுத லென்றுனது கோயிலிலே
மன்றில் விட்டி கழ்ந்து துட்ட னன் றிழுக்க மங்கை விக்கி
னந்த விர்த்து வஞ்சமற்ற பஞ்சவர்க்கு ரங்கொடுத்து
வித்தை கற்கு மிச்சை சுப்பு ரத்தி னத்தி னுக்களித்த பெருமாளே!
6சரஸ்வதி துதி✓
பக்ஷிமிருக்கவேணும் மன்னனே என்ற மெட்டு இராகம்:இந்துஸ்தான் காப்பி தாளம்:ஆதி
ஞானந் தரும் இறைவி கவிராணி-என்றன்
நாவில்வந் தருள்புரி கலை வாணி
கானுறை மயிலே கவிதையின் உருவே (ஞான)
வானமிருந் திழியும் மழைபோலே-கொட்டும்
வாக்குத் தருக மலர்க் குழலாளே
நான் முகன் மனையே நாடினேன் உனையே (ஞான)
வெள்ளைக் கமலமிசை நடிப்பவளே-இசை
வீணைதனி லமுதம் வடிப்பவளே
அள்ளித் தருவதால் ஆர்ந்திடுந் தேனே (ஞான)
தெள்ளு தமிழ்ச் சுப்புரத் தினம் பாடும்-கலைத்
தெய் வீகமே வருக அருளோடும். (ஞான)